இந்தியா

மகளிர் குழு உறுப்பினர்களுக்கு கடனுதவி

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள, மகளிர் குழு உறுப்பினர்களுக்கு, ரூ.1.24 கோடி, கடனுதவியை அமைச்சர் கந்தசாமி வழங்கினார்.கெரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், புதுச்சேரி அரசின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின், வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், குடும்ப மற்றும் மருத்துவ செலவிற்காக, சிறப்புக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, ஏம்பலத்தில் உள்ள புதுச்சேரி மத்திய கூட்டுறவு வங்கி, பாரத ஸ்டேட் வங்கி கரிக்கலாம்பாக்கம் கிளையில் சிறப்பு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அமைச்சர் கந்தசாமி, 49 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 588 உறுப்பினர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம், ரூ. 58.80 லட்சம் கோவிட் சிறப்பு கடனாகவும்,15 மகளிர் சுய உதவி குழுக்களின் 189 உறுப்பினர்களுக்கு ரூ.65 லட்சம் நேரடி இணைப்பு கடனும் வழங்கினார். நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி பொது மேலாளர் செந்தமிழ்செல்வன், ஏம்பலம் கிளை மேலாளர் குணசேகரன், பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ேஹமா, முதன்மை மேலாளர் பிரபா, கரிக்கலாம்பாக்கம் கிளை மேலாளர் வைஷ்ணவி பிரபா, வட்டார வளர்ச்சி அதிகாரி மலர், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X