திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோட்டில் உள்ள டிப்போ 1 மற்றும், 2 அலுவலகத்துக்கு தினமும், 40 பேர் பணிக்கு வருகிறார். அனைவருக்கும் முககவசம் வழங்க வேண்டும். உள்ளே செல்லும் போதும் வெளியே வரும் போதும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.ஆனால், மேற்கண்ட எந்த பரிசோதனையும் செய்யாமல், அப்படியே பணியாளர்கள்உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். சமூக இடைவெளியின்றி ஒன்றாக இணைந்து பணியாற்றுகின்றனர்.இது குறித்து, சி.ஐ.டி.யு., போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் செல்லத்துரை கூறுகையில், 'சானிடைசர் வைப்பதில்லை. முக கவசம் வழங்கவே இல்லை. வழக்கமாக பணியாளர்கள் மதிய உணவு, டீ வழங்கப்படும். தற்போது கேன்டீன் செயல்படவில்லை என்ற காரணத்தை கூறி அதையும் நிறுத்தி விட்டனர்.அரசு பணியாளர்கள் வந்து செல்ல இயக்கப்படும் பஸ்களில் டிப்போ பணியாளர், ஊழியரும் இணைந்து வர அனுமதிக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியிலாவது கழிவறைகளை சுத்தப்படுத்த வேண்டும்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE