1.25 லட்சத்தை தாண்டிய பாதிப்பு ஒரே நாளில் 137 பேர் உயிரிழப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுடில்லி : இந்தியாவில், கொரோனா வைரசால், கடந்த, 24 மணி நேரத்தில், 6,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஒரே நாளில், 137 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 1.25 லட்சத்தை தாண்டியுள்ளது. நாட்டில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கடந்த, 24 மணிநேரத்தில், கொரோனா வைரசால் புதிதாக, 6,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 1 லட்சத்து, 25 ஆயிரத்து, 101 ஆக அதிகரித்துள்ளது.

இதில், 69 ஆயிரத்து, 597 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 51 ஆயிரத்து, 783 பேர், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், குணமடைந்தோரின் விகிதம், 41.39 ஆக அதிகரித்துள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில், 134 பேர் வைரசால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில், 63 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில், 29; டில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா, 14; மேற்கு வங்கத்தில், ஆறு; தமிழகத்தில், நான்கு.ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திராவில் தலா, இரண்டு; ஹரியானாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 3,720 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரில், 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், வேறு சில நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X