பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளி விழிப்புணர்வு

Added : மே 23, 2020
Share
Advertisement
 சமூக இடைவெளி விழிப்புணர்வு

அவிநாசி:கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில், பொதுமக்கள், சமூக இடைவெளி பின்பற்றுவது தொடர்பாக, கடைக்காரர்கள் மூலமாகவே, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா ஊரடங்கில், பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. கடைகள், ஓட்டல்கள் வழக்கம் போல் செயல்படுகிறது. ஓட்டல்களில், பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. பல இடங்களில் இந்த விதிமுறை முறையாக பின்பற்றப்படுவதில்லை; கூட்ட நெரிசல் காணப் படுகிறது.எனவே, அந்தந்த கடைக்காரர்கள் மூலமாகவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீசார், தங்கள் பகுதியில் உள்ள கடைகள், ஓட்டல், வணிக நிறுவனத்தினர் மூலம், 'பிளக்ஸ் பேனர்' வைக்க அறிவுறுத்தியுள்ளனர்.அதில், 'பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். ஒரு மீட்டர் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். வெளி மாவட்டம், வெளி மாநிலம் சென்று வருவோர், இருமல், சளி உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள், பொதுமக்கள்கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்களில் பங்கு பெறுவதையும் தவிர்க்க வேண்டும்,' என்பது உட்பட விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X