தொப்புள் கொடியுடன் குழந்தை புதருக்குள் வீசிய கொடூர தாய்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொப்புள் கொடியுடன் குழந்தை புதருக்குள் வீசிய கொடூர தாய்

Added : மே 23, 2020
Share
 தொப்புள் கொடியுடன் குழந்தை புதருக்குள் வீசிய கொடூர தாய்

திருப்பூர்:திருப்பூரில், பிறந்த ஒரு நாளே ஆன குழந்தை தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில், துாக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர், அவிநாசி ரோடு, பெரியார் காலனி, தனியார் மருத்துவமனை அருகில், புதர் பகுதியில், குழந்தையின் அழு குரல் அவ்வழியே சென்ற பொதுமக்களுக்கு கேட்டது. புதருக்குள் பிறந்த ஒரு நாளே ஆன, பெண் குழந்தை தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில், துண்டால் சுத்தப்பட்டு கிடந்தது.இதைப்பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். இதனால், அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தை, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில், பராமரிக்கப்பட்டு வருகிறது.பெற்ற குழந்தையை புதருக்குள் வீசி சென்ற, கல் நெஞ்சம் கொண்ட தாய் குறித்து, அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X