இந்தியா

கொரோனா தொற்றில் இருந்து காரைக்கால் மாவட்டம் மீண்டது

Added : மே 23, 2020
Share
Advertisement

காரைக்கால்; காரைக்காலில் கொரோனா தொற்றால் பாதித்த கர்ப்பிணி குணமடைந்து வீடு திரும்பினார்.காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால் கொரோனா தொற்று இல்லாமல் பச்சை மண்டலமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி ஒர்க் ஷாப் எரிப்பு வழக்கில் சுரக்குடியை சேர்ந்த வாலிபரை திருநள்ளாறு போலீசார் கைது செய்தனர்.அவரை சிறையில் அடைக்க மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. உடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து கடந்த 16ம் தேதி குவைதில் இருந்து திரும்பிய கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால், பச்சைமண்டமாக இருந்த காரைக்கால் ஆரஞ்சு மண்டலமாக மாறியது. இதனால், மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்தியது. இதற்கிடையே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் தொடர் சிகிச்சை காரணமாக குணமடைந்து கடந்த 19ம் தேதி வீடு திரும்பினார். அவரை தொடர்ந்து கர்ப்பிணி பெண் குணமடைந்ததால், அவர் நேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். கொரோனா தொற்று குணமானாலும், ஏழு நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவ குழுவினர் ஆலோசனை கூறியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரும் குணமடைந்து வீடு திரும்பியதால், காரைக்கால் மாவட்டம் மீண்டும் பச்சை மண்டலமாக மாறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X