பொது செய்தி

தமிழ்நாடு

சாய ஆலை சங்கம் கோரிக்கை

Added : மே 23, 2020
Share
Advertisement

திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா ஊரடங்கால், ஆடை உற்பத்தி மற்றும் சாய ஆலைகள் உட்பட அனைத்து ஜாப்ஒர்க் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்களின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. நெருக்கடியான இந்த சூழலில், வங்கி கடன் திருப்பிச் செலுத்த, ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் அளித்திருப்பது, தொழில் துறையினருக்கு ஆறுதல் அளிக்கிறது.கொரோனா பாதித்த மூன்று மாதங்களுக்கு, வங்கி கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும்.
டெபாசிட்தாரர்களுக்கு வழங்கும் வட்டி, 5 சதவீத அளவில் உள்ளது.இதே வட்டியை, வரும் 2021, மார்ச் 31ம் தேதி வரை, தொழில்முனைவோர் பெற்றுள்ள கடனுக்கு வசூலிக்கவேண்டும். ஆடை உற்பத்தி துறை சார்ந்த அனைத்துக்கும், 5 சதவீதம் என்கிற ஒரே சீரான ஜி.எஸ்.டி., வரி நிர்ணயிக்கவேண்டும்.இவ்வாறு, அதில் அவர் தெரிவித்துள்ளார்.ஊராட்சிக்கு கிருமிநாசினிஅவிநாசியில் உள்ள ஊராட்சிகளில், சுகாதாரம் காக்க, சோடியம் ஹைப்போகுளோரைட் கிருமிநாசினி, வரவழைக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தில், 31 ஊராட்சிகள் உள்ளன. அவற்றில் தெருக்களை சுத்தம், சுகாதாரமாக வைக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது, கிருமிநாசினி தெளித்து, தொற்று ஏற்படுவதை தவிர்க்க, ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, சோடியம் ஹைப்போ குளோரைட் என்ற கிருமிநாசினி, அவிநாசி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், மூலம், ஒவ்வொரு கிராம ஊராட்சிகளுக்கும் வழங்கப்படுகிறது.சி.ஏ., பயிற்சி வகுப்புஆன்லைன் மூலம், பிளஸ் 2 மாணவர்களுக்கு, தென்னிந்திய பட்டயக்கணக்காளர் அமைப்பு, சி.ஏ., பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இது குறித்து, அமைப்பின் துணைத்தலைவர் ஜலபதி, கூறியதாவது:சி.ஏ., படித்தவர்களுக்கு, சிறந்த எதிர்காலம் உள்ளது. தமிழக மாணவர்கள், இப்படிப்பில் சேர, சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். முதன்முறையாக, சி.ஏ., பவுண்டேஷன் கோர்ஸ் படிக்க, ஆன்லைன் மூலம், வரும் ஜூன் 10ம் தேதி பயிற்சி வகுப்பு துவங்கப்படுகிறது. பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகளில், சி.ஏ., படிக்க விரும்புவோர், வீட்டில் இருந்தவாறே, இந்த வகுப்பில் பங்கேற்கலாம். இதற்குப் பதிவு செய்ய: http://bit.do/caclassஇவ்வாறு, அவர் கூறினார்.
நிவாரணம் பெற கணக்குஊரடங்கையொட்டி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு சார்பில், ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. பல தொழிலாளர்களிடம், வங்கிக்கணக்கு இல்லை. இவர்கள், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி(ஐ.பி.பி.பி.,) மூலம், கணக்கு துவங்கி, இதன் மூலம், நிவாரணம் பெற்று வருகின்றனர்.''இத்திட்டத்தை விரைந்து முடிக்க, வங்கிக்கணக்கு இல்லாத தொழிலாளர்கள், அனைவரும் தங்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகி, எந்த முன்வைப்புத்தொகையும் இல்லாமல், ஐ.பி.பி.பி., கணக்கை வரும் 26ம் தேதிக்குள்(நாளை) துவங்க வேண்டும்'' என்று வருவாய்த்துறையினர் கூறினர்.
வாகனப்பதிவு குறைந்ததுதமிழகம் முழுதும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், ஊரடங்குக்குப் பின், தற்போது செயல்பட்டு வருகின்றன. தினமும், அதிகபட்சமாக 5 ஆயிரம் வாகனங்கள் வரை, ஒவ்வொரு அலுவலகத்திலும் பதிவு செய்யப்பட்டு வந்தது.வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினர் கூறியதாவது:தினமும், 30 வாகனங்கள் மட்டுமே, பதிவு செய்யப்படுகின்றன. வாகன பதிவு கட்டணம், பெயர் மாற்றம் போன்றவற்றுக்கு ஆன்லைனில் செலுத்த வேண்டும். நகல் ஆவணங்களைப் பதிவேற்றினால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அசல் ஆவணங்களை முறையாக ஸ்கேன் செய்து பதிவேற்றுவது அவசியம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அ.தி.மு.க., நிர்வாகி 'எஸ்கேப்'திருப்பூரை அடுத்த காங்கயம், பாப்பிணி அருகே மலைப்பாளையத்தில் துளசிமணி என்பவரின் மேட்டாங்காட்டு தோட்டத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக தாராபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதுதொடர்பாக, 20ம் தேதி அதே ஊரை சேர்ந்த சண்முகம், 47 என்பவரை கைது செய்து, 10 லிட்டர் சாராயம், டூவீலரையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள துளசிமணியை போலீசார் தேடி வருகின்றனர். இவர், காங்கயம் ஒன்றியம் பாப்பினி ஊராட்சியில் அ.தி.மு.க., ஊராட்சி துணை செயலாளராகவும் மற்றும் வரதப்பம்பாளையம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் இயக்குனராகவும் உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X