தனியார் மயமாகும் மின் வினியோகம் தடுத்து நிறுத்த இந்திய கம்யூ., வலியுறுத்தல்| Dinamalar

இந்தியா

தனியார் மயமாகும் மின் வினியோகம் தடுத்து நிறுத்த இந்திய கம்யூ., வலியுறுத்தல்

Added : மே 23, 2020
Share

புதுச்சேரி; மின்சாரத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை புதுச்சேரி அரசு உறுதியாக எதிர்க்க வேண்டும் என இந்திய கம்யூ., வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்த அக்கட்சியின் மாநில செயலர் சலீம் விடுத்துள்ள அறிக்கை:கொரோனா ஊரடங்கில் மத்திய அரசு சுயசார்பு பொருளாதார நடவடிக்கை என்ற பெயரில் மத்திய அரசு நாட்டின் தொழில் வளங்கள் அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்க்கும் வேலையை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி யூனியன் பிரதேச மின் வினியோக முறை தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்திருப்பதை இந்திய கம்யூ., வன்மையாக கண்டிக்கிறது. மின் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கு சம்பளம் மின்கட்டண வருவாயிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின் வினியோகம் தனியாரிடம் ஒப்படைத்தால் விவசாயிகள் மற்றும் குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்தாகும். மின் கட்டணம் உயரும். இதனால், அனைத்துப் பொருட்களின் விலை உயரும். ஊழியர்கள் வேலை இழப்பர்.எனவே மின்சாரம் தனியார்மய பேராபத்திலிருந்து மக்களை காத்திட புதுச்சேரி அரசு உறுதியாக இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவையாக உள்ள மின்சாரத்தை, சந்தை பொருளாக மாற்றும் திட்டத்தை முறியடிக்க மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X