இந்தியா

சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி தேவை

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; பொதுத் தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 28ம் தேதி முதல் சமூக இடைவெளியை பின்பற்றி சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என சுயநிதி கல்வி நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் சந்திரசேகரன் விடுத்துள்ள அறிக்கை:பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 15 முதல் பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் உளவியல் ரீதியான பாதிப்பில் இருந்து மீளவில்லை. பள்ளி சூழல் மட்டுமே மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த முடியும்.எனவே, பொதுத் தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 28ம் தேதி முதல் சமூக இடைவெளியை பின்பற்றி அந்தந்த தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X