வேளாண் டிஜிட்டல் புரட்சி!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் டிஜிட்டல் புரட்சி!

Added : மே 23, 2020
Share

கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு தொடர்கிறது. விவசாயப்பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இருப்பினும், சாகுபடிப்பணிகளை மேற்கொள்வதில் துவங்கி, தொழிலாளர்களை அழைத்துச் செல்லுதல், விளைபொருட்களை விற்றல், உரங்களைப் பெறுதல், போக்குவரத்தில் சிக்கல் உட்பட பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்தனர்.அதேநேரம், இந்த நெருக்கடி, விவசாயிகளை வேறு தளத்துக்கு இட்டுச் சென்றிருக்கிறது. பசுமைப்புரட்சி போல, டிஜிட்டல் புரட்சி, வேளாண்மையில் ஆரவாரமின்றி புகுந்துள்ளது.
சில ஆண்டுகள் முன் வரை, ஒரு விளைபொருளின் தரத்தை அறிய, நேரடியாக களத்துக்கு சென்றுதான் நிலைமையை தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது, விளைபொருளின் படங்களை கொண்டு, தரத்தை கண்டறிய முடிந்தது.'இ(னி) நாம்' எழுச்சி'இ-நாம்' எனப்படும், தேசிய வேளாண் சந்தை, எந்த மூலையில் உள்ள விவசாயியையும்,உழவர் உற்பத்தியாளர் அமைப்பினரையும், வர்த்தகர்களையும் இணைத்தது என்றே சொல்லலாம். ஊரடங்குக்கு பின், 'இ-நாம்' செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியது.
குறிப்பாக, ஆயிரம் மண்டிகளுக்கு மேல், இதனுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. எதிர்காலம், 'இ-நாம்' மேலும் மேம்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தோட்டக்கலைத்துறை சார்பில், இ-தோட்டம் செயலி மூலம், விளைபொருட்கள் பெறப்பட்டதும், விற்கப்பட்டதும் அதிகரித்தது. பொருட்களை கொண்டு செல்ல, உரிய போக்குவரத்து வசதிகளை, செயலி மூலம், விவசாயிகள் மேற்கொள்ள முடிந்தது. வேளாண் துறையினரே வீடு தேடி வந்து, சந்தைகளுக்கு கொண்டு செல்ல உதவியதற்கும், செயலிகள் உதவின.ஊரடங்கு காலத்தில் மனித உழைப்பு, சமூக இடைவெளி விட்டு நடைபெற வேண்டியிருந்தது. இதனால், வேளாண் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இதுபோன்ற கருவிகள், செயலி மூலம், அந்தந்த வயல்கள் மற்றும் தோட்டங்களுக்கே வரவழைக்கப்பட்டன.டிஜிட்டலில் அனுமதிகடன் வாங்க வேண்டும் என்றால், நடையாய் நடக்க வேண்டும் என்றில்லாமல், ஒரு சில நிதி நிறுவனங்கள், விவசாயிகளிடம் உள்ள விளைபொருள் இருப்பின் தரம் மற்றும் அளவை அறிந்துகொண்டு, இந்த விளைபொருளையே அடமானமாகக் கருதி, டிஜிட்டல் முறையில் கடன்களுக்கு அனுமதி வழங்கியிருக்கின்றன.
ஊரடங்கு காலத்தில் வங்கிக்கு செல்லாமல், இதுபோன்ற கடனுதவி பெற்ற விவசாயிகள் பலர். இருப்பினும், இந்த முறை, இன்னும் முறைப்படுத்தப்படவில்லை. இது, எதிர்காலத்தில் முறைப்படுத்தப்படலாம்.அரசு மற்றும் விவசாயிகள், டிஜிட்டல் நுட்பத்தை, விவசாயத்தில் எந்த வகையில் புகுத்தலாம் என்பதை உணர்த்த உதவியிருக்கிறது, ஊரடங்கு என்றால், அது மிகையில்லை. ஆனால், இதன் பயணம், இனிமேல் தான் வீறுகொண்டு எழும்!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X