ஊரடங்கு வதந்திகளை பகிர வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள்| Dinamalar

இந்தியா

ஊரடங்கு வதந்திகளை பகிர வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள்

Added : மே 23, 2020
Share

புதுச்சேரி; புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு சம்பந்தமாக வரும் வதந்திகளை பகிர வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதாக கூறிய, சுகாதாரத் துறை, மாநிலம் சிவப்பு மண்டலமாக மாறியதாக அறிவித்தது. இதனை முதல்வர் நாராயணசாமி மறுத்தார்.இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி மாநில சுகாதாரத் துறை புதுச்சேரியில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார், சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர். கொரோனா மற்றும் ஊரடங்கு குறித்து வதந்தி தகவலைப பதிவிட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பினர்.மேலும், புதுச்சேரியில் தற்போதுவரை ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் நேரம் மாற்றம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என சைபர் கிரைம் போலீசார், சமூக வலைதள குரூப்களில் குறுஞ்செய்தி மூலம் விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்களில் பரவும் வதந்திகளை அடுத்தவர்களுக்கு பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X