அரசு சாராய ஆலை விவகாரம்: காங்., எம்.எல்.ஏ., சவால் | Dinamalar

இந்தியா

அரசு சாராய ஆலை விவகாரம்: காங்., எம்.எல்.ஏ., சவால்

Added : மே 23, 2020
Share

புதுச்சேரி; ஊரடங்கில், அரசு ஆலையில் இருந்து சாராயம் விற்ற விவகாரம் பொய்யென நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தாயாரா என வையாபுரிமணிகண்டன் எம்.எல்.வுக்குகாங்., எம்.எல்.ஏ., விஜயவேணி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து விஜயவேணி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வையாபுரிமணிகண்டன், அரசு சாராய வடி ஆலையில் ஊரடங்கு சமயத்தில் 6 டேங்கர் லாரியில் 10 லட்சம் லிட்டர் சாராயம் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி இந்த அரசின் மீதும், நான் தலைவராக பதவி வகிக்கும் புதுச்சேரி அரசு சாராய வடிகால் ஆலை நிர்வாகத்தின் மீதும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் கூறியுள்ளார்.புதுச்சேரி சாராய ஆலை அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக் கூடியது. மேலும் கலால்துறையின் பர்மிட் இருந்தால் மட்டுமே சாராயம் வெளியில் எடுத்து வர முடியும். சி.சி.டி.வி., கண்காணிப்பு, தாசில்தார் அங்கு பணியில் உள்ளனர்.கொரோனா ஊரடங்கின்போது சானிடைசர் தயாரிக்க, கலெக்டர் அனுமதியுடன் சாராயம் கொடுத்துள்ளோம்.அதனை தவிர வேறு ஏதும் நடக்கவில்லை.அப்படி இருக்கும்போது அவர் என் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். காரணம்ஆட்சி மாற்றத்திற்காக என்னை அவர் அணுகியது தொடர்பாக நான் அவர் மீதுஏற்கனவே சபாநாயகரிடம் புகார் மனு அளித்துள்ளேன். அது இன்றுவரை நிலுவையில் உள்ளது. இதை மனதில் வைத்து நான் பொறுப்பேற்றிருக்கும் நிறுவனத்தின் மீது இதுபோன்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டைகூறியுள்ளார்.அவர் கூறிய குற்றச்சாட்டை உண்மை என நிரூபித்து விட்டால் நான் வகிக்கும் பதவியை ராஜினாமா செய்கின்றேன். அவர் கூறியுள்ளதை பொய்யென நான் நிரூபித்தால் அரசியலில் இருந்து அவர் ஒதுங்கிக் கொள்ள தாயாரா? மேலும் இதுபோன்று அவரின் போக்கு தொடர்ந்தால் தாழ்த்தப்பட்ட மகளிர் ஆணையத்திடம் புகார் அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X