பொது செய்தி

தமிழ்நாடு

500 ஆணையத்திடம் அனுமதி கேட்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

சென்னை : தமிழக மின் வாரியம், 'பி.டி.சி., இந்தியா' என்ற நிறுவனம் வாயிலாக, 300 முதல், 500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி உள்ளது.

தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய அரசு மற்றும் தனியார் மின் நிலையங்களில் இருந்து, மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு, மின் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் செய்வதற்கு, மின் வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், முறைப்படி அனுமதி பெற வேண்டும்.பி.டி.சி., இந்தியா என்ற நிறுவனம் வாயிலாக, 2019 முதல், மூன்று ஆண்டுகளுக்கு, 24 மணி நேரமும், 550 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, மின் வாரியம், 2018ல் ஒப்பந்தம் செய்து, மின்சாரமும் வாங்கி வருகிறது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:பி.டி.சி., நிறுவனம், பல்வேறு மின் நிலையங்களிடம் இருந்து, மின்சாரத்தை கொள்முதல் செய்து, மாநில மின் வாரியங்களுக்கு விற்கிறது.இதனால், குறைந்த விலைக்கு மின்சாரம் கிடைக்கிறது. எனவே, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, அந்நிறுவனத்திடம் இருந்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, 24 மணி நேரமும் என்ற அடிப்படையில், 300 முதல், 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதற்கு, ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், மின் கொள்முதல் செய்வதற்கான பணிகள் துவங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X