பொது செய்தி

தமிழ்நாடு

வண்ணங்களால் வசீகரிக்கும் முக கவசங்கள் விற்பனை

Added : மே 23, 2020
Share
Advertisement
 வண்ணங்களால் வசீகரிக்கும் முக கவசங்கள் விற்பனை

திருப்பூர்:விதவிதமான வாசகங்கள், படங்கள் பொறிக்கப்பட்ட முக கவசம் தயாரித்து சந்தைப்படுத்துவதில் திருப்பூர் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு மக்கள் அணிவதற்கான துணி முக கவசங்களை அதிகளவில் தயாரித்து வருகின்றன.
உள்நாட்டு பயன்பாட்டுக்காக, பல்வேறு விதமான முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.நடிகர், நடிகையர் முகம், டாம் அண்டு ஜெர்ரி, சோட்டா பீம், சூப்பர் மேன் உள்ளிட்ட கதாபாத்திரங்களின் உருவம் பொறிக்கப்படுகிறது. டிக்-டாக், பப்ஜி, பேட்மேன், கோமாளி உருவம் என பல்வேறு வடிவம், வண்ணங்களில் முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வர்த்தகர் ஒருவர் கூறியதாவது:சாதாரண முக கவசங்களைவிட, பிரின்டிங் செய்யப்பட்ட முக கவசங்களையே பலரும் விரும்பி வாங்கி அணிகின்றனர். 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை முக கவசங்களை விற்பனை செய்கிறோம். திருப்பூர் சுற்றுப்பகுதி மட்டுமின்றி, சென்னையிலிருந்தும் அதிகளவு ஆர்டர்கள் வருகின்றன. ஆர்டர்களை பெற்று, தேவையான வண்ணம்; படங்களை பொறித்து, அனுப்பி வைக்கிறோம்.முக கவசம் வர்த்தகமே தற்போது, எங்களைப்போன்ற வர்த்தகர்களையும், ஆடை உற்பத்தி துறையினரையும் பாதுகாத்துவருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X