இந்தியா

மதுக்கடை திறக்க முடியாமல் போகும் என்பதால், சிவப்பு மண்டலமாக அறிவிக்க அரசு மறுக்கிறது

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுவை: மதுக்கடை திறக்க முடியாமல் போகும் என்பதால், சிவப்பு மண்டலமாக அறிவிக்காமல், அரசு மக்களின் உயிர் விஷயத்தில் விளையாடுவதாக அ.தி.மு.க., குற்றம் சாட்டியுள்ளது.இதுகுறித்து அன்பழகன் எம்.எல்.ஏ., விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் கொரோனா வீரியம் புரியாமல், ஆளும் காங்., அரசு அலட்சியமாக நடந்து வருகிறது. கடந்த 3 மாதங்களாக பெரிய பாதிப்பு இல்லாத நிலையில், இன்று சிவப்பு மண்டல தகுதிக்கு ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தலை புதுச்சேரி அரசு கடைபிடிக்கவில்லை.அரசின் கவனம் முழுவதும் மதுக்கடை திறப்பு விஷயத்தில் இருப்பது நியாயமற்றது. தற்போது புதுச்சேரியில் 25 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 20 பேர் சிகிச்சை பெற்றலே சிவப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால் மதுக்கடை திறக்க முடியாமல் போகும் என்பதால் சிவப்பு மண்டலமாக அறிவிக்காமல் மக்களின் உயிர் விஷயத்தில் விளையாடுகிறது.மதுக்கடை விவகாரத்திற்காக இரு நாட்களில், மூன்று அமைச்சரவை கூட்டிய ஆட்சியாளர்கள், கொரோனா தடுப்பு சம்பந்தமாகவோ, நிவாரண உதவிகள் சம்பந்தமாகவோ எவ்வித ஆலோசனைகளையும் நடத்தாதது வேதனையாக உள்ளது.விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து, யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கல் போன்ற மத்திய அரசின் அறிவிப்புகள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானவை என தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மாநில உரிமையை பறிக்கும் மத்திய அரசின் நிதி நிர்பந்தங்களை ஏற்காததற்கு, புதுச்சேரி அரசு சட்டசபையை கூட்டி தீர்மானமாக கொண்டுவர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X