இந்தியா

புதுச்சேரியில் உயரும் கொரோனா பாதிப்பு மருத்துவமனையில் 25 பேருக்கு சிகிச்சை

Updated : மே 24, 2020 | Added : மே 23, 2020
Share
Advertisement
 புதுச்சேரியில் உயரும் கொரோனா பாதிப்பு மருத்துவமனையில் 25 பேருக்கு சிகிச்சை

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 37 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் நேற்று முன்தினம் வரை, 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், புதுச்சேரியில் வசிப்பவர்கள் 15 பேர்; குவைத், துபாய் நாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பி உள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்கள் 5 பேர்.

இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் மூன்று பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது. வடமங்கலம், சாரம் வேல்முருகன் நகரை சேர்ந்த 2 ஆண்கள், குருமாம்பட்டை சேர்ந்த பெண் ஒருவர் என 3 பேருக்கு கொனோரா தொற்று நேற்று உறுதியானது.வடமங்கலம் மற்றும் வேல்முருகன் நகரை சேர்ந்தவர்கள், வில்லியனுார் பைபாஸ் சாலையை சேர்ந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பைனான்ஸ் செய்பவருடன் தொடர்பில் இருந்தவர்கள். அவர் மூலமாக இவர்கள் இருவருக்கும் கொரோனா பரவி உள்ளது.சென்னையில் இருந்து திரும்பிய குருமாம்பட்டு வாலிபருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவரது தம்பிக்கு நேற்று முன்தினமும், அவரது தாய்க்கு நேற்றும் தொற்று உறுதியாகி உள்ளது. மூவரும் கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வசிக்கும் பகுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, புதுச்சேரியில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை வரை 23யை தொட்டுள்ளது.துபாயில் இருந்து காரைக்காலுக்கு திரும்பிய பெண் ஒருவரும், துபாய் மற்றும் மும்பையில் இருந்து மாகிக்கு திரும்பிய இரண்டு பேரும் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.இதில், காரைக்கால் பெண்ணுக்கு இரண்டாவது சோதனையில் நெகட்டிவ் வந்ததால் மருத்துவமனையில் இருந்து நேற்று வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதன் மூலம் காரைக்கால் பகுதி கொரோனா இல்லாத பகுதியாகி உள்ளது. ஏனாமும் இதுவரை கொரோனா பாதிக்காத பகுதியாக தொடர்கிறது.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இதில், 25 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்;11 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். மாகியை சேர்ந்த முதியவர் ஒருவர் கண்ணுார் மருத்துவமனையில் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X