பொது செய்தி

தமிழ்நாடு

100, 112 எண்களில் போலீசை அழைக்கலாம்

Added : மே 23, 2020
Share
Advertisement

சென்னை : 'அவசர போலீஸ் எண்: 100, 112க்கு, வழக்கம் போல, பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்' என, தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.பி.எஸ்.என்.எல்., தொலைதொடர்பு நிறுவனத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஏர்டெல், வோடாபோன், ஐடியா மற்றும் ஜியோ நிறுவன வாடிக்கையாளர் களின், மொபைல் போன்களில் இருந்து, அவசர போலீஸ் எண்: 100, 112ல் தொடர்பு கொண்டால், அந்த அழைப்புகளை, காவல் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, பொது மக்கள், தற்காலிகமாக, 044 - 46100100, 044 - 71200100 என்ற எண்களுக்கு, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம், என, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. தற்போது, தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால், பொது மக்கள், வழக்கமாக, அவசர போலீஸ் எண்: 100, 112க்கு தொடர்பு கொள்ளலாம் என, தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X