சமூக இடைவெளி எங்கே? நகராட்சி பணியாளர் அலட்சியம்

Added : மே 23, 2020
Share
Advertisement
 சமூக இடைவெளி எங்கே? நகராட்சி பணியாளர் அலட்சியம்

பல்லடம்:பல்லடத்தில், பல்வேறு பணிகளுக்காக செல்லும் நகராட்சி பணியாளர்கள், வாகனங்களில் கூட்டாக செல்வதால், சமூக இடைவெளி கேள்விக்குறியாகி விட்டது.பொதுமக்கள், சமூக இடைவெளியை பின்பற்றாமல், முக கவசம் அணியாமலும், சுகாதார துறையின் அறிவுரைகளை அலட்சியப்படுத்தி வருகின்றனர். இச்சூழலில், பல்வேறு பணிகளுக்காக செல்லும் நகராட்சி பணியாளர்களும், கூட்டமாக ஆட்டோ, மற்றும் வேன்களில் செல்வதால், சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகி வருகிறது.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நகராட்சி நிர்வாகம், பணியாளர்களை ஒரே வாகனத்தில் அடைத்து அனுப்புகின்றனர். இதனால், மக்களிடம் மேலும் அலட்சியம் ஏற்படுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே, நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பணியாளர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X