இ பாஸ் இருந்தால் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதி| Dinamalar

இந்தியா

இ பாஸ் இருந்தால் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதி

Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share

புதுச்சேரி; புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க, வெளி மாநிலங்களில் இருந்த வருவோர் இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் அருண் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை, போலீசார், வருவாய் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில், வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை உடல் பரிசோதனை செய்த பின்னரே புதுச்சேரி எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும்.உடல் வெப்ப நிலை பரிசோதிக்கையில், அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், அவர் கண்காணிப்பு மையத்தில் வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் உரிய இ பாஸ் பெற்று வரவேண்டும். இ பாஸ் இல்லாமல் வருபவர்களை புதுச்சேரி எல்லைக்குள் அனுமதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X