இந்தியா

மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூல்

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் முக கவசம் அணியாமல் வெளியே வந்ததாக, 12 ஆயிரத்து 822 பேரிடம் ரூ.12.83 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முககவசம் அணிவதும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றல் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், பொது இடம் மற்றும் பணியிடத்தில் முக கவசம் அணியாவிட்டால் மற்றும் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ. 100 அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டது.அதனையொட்டி, கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களிடம் போலீஸ், வருவாய்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் ஊழியர்கள் அபராதம் வசூலித்து வருகின்றனர்.அதன்படி கடந்த ஒரு மாதத்தில், போலீசார் மட்டும் 12 ஆயிரத்து 822 பேரிடம் ரூ. 12 லட்சத்து 83 ஆயிரத்து 500 அபராதமாக வசூலித்துள்ளனர்.இதில் நேற்று மட்டும் 305 நபர்களிடம் ரூ. 30,500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X