இந்திய சிறுமிக்கு டிரம்ப் மகள் பாராட்டு

Updated : மே 24, 2020 | Added : மே 23, 2020
Share
Advertisement

வாஷிங்டன்: பீஹாரை சேர்ந்த மோகன் பஸ்வான் என்பவர், ஹரியானாவின் குர்கானில், ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வந்தார். ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வந்த மோகனுக்கு, காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மோகனின், 15 வயதான மகள் ஜோதி குமாரி, தன் தந்தையை, சைக்கிளின் பின்புறம் அமர வைத்து, குர்கானில் இருந்து பீஹார் வரை, 1,200 கி.மீ., துாரத்தை, ஏழு நாளில் கடந்துள்ளார்.

சிறுமி ஜோதியின் சைக்கிள் ஒட்டும் திறமை மற்றும் மன தைரியத்தை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள், இவாங்கா வெகுவாக பாராட்டி உள்ளார். 'அபாரமான சைக்கிள் ஓட்டும் திறமை கொண்ட ஜோதி குமாரி, சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்று, உலக அளவில் சாதனைகள் படைக்க வேண்டும்' என, தன் 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில், வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X