இந்தியா

சாராய ஆலை குற்றச்சாட்டு: சி.பி.ஐ.,க்கு கவர்னர் பரிந்துரை

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; சாராய ஆலை குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர் பரிந்துரை செய்துள்ளார்.புதுச்சேரி வடிசாராய ஆலையில் நடந்த 10 லட்சம் லிட்டர் சாராய கொள்ளை குறித்து விசாரிக்க வேண்டி கவர்னரிடம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வையாபுரிமணிகண்டன் மனு அளித்தார்.அத்துடன் ஆலையின் நிர்வாகத்தில் இருந்தவர்களோடு சிலர் ரகசிய கூட்டணி அமைத்து, பல கோடி மதிப்புள்ள சாராயத்தை கொள்ளையடித்து, வரி ஏய்ப்பு செய்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்துள்ளனர். எனவே கவர்னர் சாராய வடி ஆலையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.இந்த குற்றச்சாட்டை, சாராய வடி ஆலை தலைவரான விஜயவேணி எம்.எல்.ஏ., மறுத்ததோடு, குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகுவதாக வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ.,விற்கு சவால்விட்டார்.இந்நிலையில், வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ., கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.,யின் பார்வைக்கு கவர்னர் பரிந்துரை செய்துள்ளார். இதனால், வடிசாராய ஆலை விவகாரம் குறித்து சி.பி.ஐ., விரைவில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X