ஆட்டோ இயங்க அனுமதி நிபந்தனையால் கடும் அவதி

Added : மே 23, 2020
Share
Advertisement
 ஆட்டோ இயங்க அனுமதி நிபந்தனையால் கடும் அவதி

திருப்பூர்:இரண்டு மாதங்களுக்கு பின் பயணிகள் ஆட்டோக்கள் நேற்று முதல் இயங்கத் துவங்கின. ஆனால், ஒரு பயணிக்கு மட்டுமே அனுமதி என்ற நிபந்தனையால் அவதி ஏற்பட்டுள்ளது.நேற்று முதல் தமிழகத்தில் பயணிகள் ஆட்டோ இயங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஒரு பயணி மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால், தம்பதியாகவோ, ஒரு குடும்பத்தினரோ வந்தால் கூட பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் பொது நலச் சங்கத்தினர் கூறியதாவது:இரண்டு மாதமாக முழுமையாக வருமானம் பாதிக்கப்பட்டு, இதை நம்பியுள்ள குடும்பங்கள் பெரும் சிக்கலில் தவித்து வருகிறது. நிதி நிறுவனங்கள் வட்டி, கடன் தவணை என நெருக்கடி தருகின்றன. ஆட்டோ இயக்க அனுமதித்தும் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதால் சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X