அரசியல் செய்தி

தமிழ்நாடு

அச்சு ஊடகங்களுக்கு உதவுங்கள் ; ராமதாஸ் கடிதம்

Added : மே 23, 2020
Share
Advertisement
 அச்சு ஊடகங்களுக்கு உதவுங்கள் ; ராமதாஸ் கடிதம்

சென்னை : 'பொருளாதார முடக்கநிலை பாதிப்புகளில் இருந்து, அச்சு ஊடகங்களை மீட்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதம்:அச்சு ஊடகங்களை நடத்துவது, சவாலானதாக மாறியிருக்கிறது. அச்சு ஊடகங்கள் தடையின்றி இயங்க வேண்டு மானால். அவற்றிற்கு, தொடர்ந்து விளம்பரம் கிடைப்பது அவசியம்.பொருளாதார மந்த நிலை காரணமாகவும், பணப்புழக்கம் இல்லாததாலும், மக்களிடையே நுகர்வு என்பது, அடியோடு குறைந்து விட்டது.விளம்பரம்தனியார் விளம்பரங்கள், உடனே கிடைக்க வாய்ப்புகள் இல்லை. நிலைமை சீரடைந்து, தனியார் விளம்பரங்கள் கிடைக்க, இன்னும் ஓராண்டு வரையாகலாம் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இத்தகைய சூழலில், அரசு விளம்பரங்கள் தான், ஊடகங்களுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கும்.

ஆனால், மத்திய, மாநில அரசுகளின் விளம்பர செலவுகள், சிக்கன நடவடிக்கையாக, குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளன. இது, ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் கிடைப் பதற்கு, பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும்.மற்றொரு புறம், விளம்பரங்களை வெளியிட்ட வகையில், அச்சு ஊடகங்களுக்கு, மத்திய, மாநில அரசுகள், 1,500 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டிஉள்ளது. விளம்பர வருவாய், திடீரென முற்றிலுமாக குறைந்து விட்ட நிலையில், மத்திய, மாநில அரசுகள், நிலுவை தொகையை வழங்கினால் தான், அச்சு ஊடகங்களால் நிலைமையை சமாளிக்க முடியும்.

நிலுவைத் தொகைஎனவே, செய்தித்தாள் காகிதம் மீதான வரி ரத்து செய்யப்பட வேண்டும். விளம்பர நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். விளம்பரக் கட்டணம், 100 சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை, கனிவுடன் பரிசீலித்து, நிறைவேற்றி தர வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X