திருப்பூர்:மழைக்காலத்தில் மாடுகள், அவ்வப்போது இயற்கை, செயற்கை பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. பல்வேறு நோய்களால் மாடுகளின் பால் உற்பத்தி திறன் குறைவதோடு, மாடுகள் இறக்கவும் நேரிடுகிறது.தகுந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலம் மழைக்கால நோய்களை தடுப்பதோடு, பெரும் பொருளாதார இழப்பையும் தடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கால்நடைத்துறையினர் கூறியதாவது:பருவமழை விரைவில், துவங்கவுள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போர், கலப்பு தீவனங்களை ஈரமற்ற உலர்ந்த நிலைகளில் பாதுகாத்து வைக்க வேண்டும். ஈரத்தில் மக்கி போன வைக்கோல்களை மாடுகளுக்கு அளிக்கக் கூடாது.ஆற்றுப்படுகைகளில் மேடான இடங்களில் மாடுகளை கட்டவேண்டும். மழைக்கால நோய்களை தடுக்க கோமாரி நோய் தடுப்பூசி கன்றுகளுக்கு, 4 மாதத்திலும், மற்ற மாடுகளுக்கு, 6 மாத இடைவெளியில் ஆண்டுக்கு இரு முறையும் போட வேண்டும்.மழைக்காலத்தில், வேறு பகுதிகளில் இருந்து புதிய மாடுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளுக்கு நோய் பரவுவதை தடுக்க மாட்டு தொழுவங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர், கழிவுநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE