பொது செய்தி

தமிழ்நாடு

இரவில் 'பறக்கும்' லாரிகள்: கனிம வளங்கள் கடத்தலா?

Added : மே 23, 2020
Share
Advertisement

பல்லடம்:பல்லடம் அருகே கணபதிபாளையத்தில், இரவு நேரங்களில் லாரிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.பல்லடம் வட்டாரத்தில், கோடங்கிபாளையம், வேலம்பாளையம், பூமலுார், கணபதிபாளையம் என பல பகுதிகளில், கல்குவாரிகள் உள்ளன. ஊரடங்கு, தளர்வால், வாகனங்கள் வழக்கம் போல் ஓட துவங்கியுள்ளன. இச்சூழலில், கணபதிபாளையம் பகுதியில், இரவு நேரங்களிலும், லாரிகள் நடமாட்டம் உள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.பொதுமக்கள் கூறியதாவது:கணபதிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், பயன்படுத்தப்படாத பாறை குழிகள் அதிகம் உள்ளன. வழக்கமாகவே, இரவு நேரங்களில் அடிக்கடி லாரிகள் இவ்வழியாக செல்லும். ஊரடங்கு தளர்வினை தொடர்ந்து, மீண்டும் இரவு நேரங்களில் லாரிகள் அதிகரித்துள்ளன.இரவில் வெடி சத்தமும், லாரிகள் நடமாட்டமும் உள்ளதால், கனிம வளங்கள் ஏதேனும் கடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X