அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு ; சேலத்தில் முதல்வர் இ.பி.எஸ்., பேச்சு

Added : மே 23, 2020
Share
Advertisement
 கொரோனா பாதிப்பு  ; சேலத்தில் முதல்வர் இ.பி.எஸ்., பேச்சு

சேலம் : ''கொரோனா பாதிப்பு சமூக தொற்றாக மாறவில்லை. சென்னையின் சில இடங்களில் உள்ள பரவலை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூன், 1ல் ஊரடங்கு தளர்வு குறித்து, மருத்துவக் குழுவினருடன் ஆலோசித்து, முடிவெடுக்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளுடன் நடந்த ஆய்வு கூட்டம் நடந்தது. பின்னர் முதல்வர் நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டில், தமிழகத்தில் தான், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிக பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம் என, மருத்துவக் குழு பாராட்டியுள்ளது. அதிக பரிசோதனை கூடம் உள்ள மாநிலமும் தமிழகம் தான். அதற்கு, மருத்துவக் குழுவே காரணம்; அவர்களை பாராட்டுகிறேன்.

கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை. சென்னையில், நெரிசலான பகுதியில், நோய் கண்டறியப்பட்ட, தடை செய்யப்பட்ட பகுதிகளில் தான் பரவுகிறது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.சேலம், 'ஜோர்!'அரசு அறிவித்த வழிமுறைகளை, சரியாக செயல்படுத்தியதால், 'கொரோனா' இல்லாத மாவட்டமாக, சேலம் மாறிவிட்டது. மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். அதனால், மாவட்டத்தில் ஒருவருக்கு கூட, தொற்று இல்லை.ஆனால், தொற்று தடுக்க தவறியதாக, ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார்.

எந்த தவறையும், அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. உயர் பதவியில் இருப்பவர் மீது, பழி சுமத்தினால் தான், தன் கட்சியை வெளிகாட்ட முடியும் என்பதை, ஸ்டாலின் செய்து வருகிறார். நிதி கிடைக்கவில்லைமத்திய அரசு படிப்படியாக, நிதியுதவி அளிக்கிறது. ஆனால், கேட்ட தொகை, இன்னும் கிடைக்கவில்லை. மக்களுக்கு உதவும், மத்திய அரசுக்கு துணை நிற்போம். ஜி.எஸ்.டி., நிதியையும், மத்திய அரசு வழங்கும்.ஜூன், 1ல், ஊரடங்கு தளர்வு குறித்து, மத்திய அரசு முடிவு செய்யும். விரைவில் மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்.

மேட்டூர் அணை, ஜூன், 12ல் திட்டமிட்டபடி திறக்கப்படும். இலவச மின்சாரம், எம்.ஜி.ஆரின்., கனவு திட்டம். அதை, ஜெயலலிதா தொடர்ந்து செயல்படுத்தினார். அதனால், இலவச மின்சாரம் தொடர, பிரதமருக்கு, கடிதம் மூலம் தெளிவுபடுத்தி விட்டோம். கோடையில், குடிநீர் பிரச்னையை போக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, தட்டுப்பாடின்றி பார்த்துக் கொள்ள, அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுஉள்ளது. அதேபோல், குடிமராமத்து திட்டத்தை, அனைத்து மாவட்டத்திலும் சிறப்பாக செயல்படுத்த, அதிகாரிகள் களமிறக்கப் பட்டுள்ளனர். சிறு, குறு, பெருந்தொழில் நிறுவனங்கள், புறநகர் பகுதிகளில் செயல்பட, பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

வேளாண் துறைக்கு முழுவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழிகாட்டுதல்படி, ஆட்டோ இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியே சென்று வந்தால், கை,கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். அப்போது தான், நோயை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X