பொது செய்தி

தமிழ்நாடு

'கிராபினில்' வைரஸ் தடுப்பு ஆடை: கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர் தகவல்

Added : மே 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர், முதலிபாளையம் அடல் இன்குபேஷன் மையம் மற்றும் பெங்களூரு ஓஹூ இன்ஸ்டிடியூட் சார்பில், ஜவுளித்துறை கண்டுபிடிப்புகள் குறித்த ஆன்லைன் கருத்தரங்கம் நடந்தது.சர்வதேச ஜவுளி ஆராய்ச்சியாளர் மற்றும் ஏற்றுமதியாளரான முகமத் நுாருல்லா பேசியதாவது:மத்திய அரசு, தாராளமாக அன்னிய முதலீடுகளை ஈர்க்கவேண்டும். அந்த முதலீடுகளை பயன்படுத்தி, பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். தானியங்கி தொழில்நுட்பங்களை ஜவுளித்துறையில் அதிகளவு புகுத்தவேண்டும்.
புதிய தொழில்நுட்பங்களுக்கு செயல்வடிவம் கொடுத்ததன்மூலம், மிக குறுகிய காலத்தில் அமெரிக்க நிறுவனங்கள் பல, மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன. நாம் பயன்படுத்தும் பென்சிலின் நடுவில் கிராபின் உள்ளது. இது, குண்டு துளைக்காத ஆடை தயாரிப்புக்கு பயன்படுகிறது என்பது பழைய செய்தி.ஆனால், கொரோனா வைரசை தடுப்பதற்கும் இந்த கிராபின் பயன்படுகிறது என்பதுதான், புது செய்தி. தற்போதைக்கு இவைவிடச் சிறந்த வைரஸ் கொல்லி வேறில்லை.
எனவே, இதை பயன்படுத்தி, வைரஸ் தொற்று தடுப்பு ஆடைகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் உடனடியாக துவக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.திருப்பூர், பெங்களூரு, சென்னை, மும்பை, டில்லி மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளைச்சேர்ந்த ஜவுளித்துறையினர் 300 பேர் பங்கேற்றனர். அடல் இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X