குடிநீர் இணைப்பு 'கட்'; மக்கள் பெரும் தவிப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

பொங்கலுார்:அலகுமலையில் பொது குழாய் இணைப்பை துண்டித்ததால், பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர்.பொங்கலுார் ஒன்றியம், அலகுமலையில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டு மனையில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை.அவர்களுக்கு பொது குடிநீர் குழாயும் இல்லாததால், தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'பலருக்கு முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.குழாய் இணைப்பு துண்டிப்பால், தண்ணீரை விலைக்கு வாங்குகிறோம். கொரோனாவால் வேலை இழந்தஎங்களுக்கு இது பெரும் சுமையாக அமைந்துள்ளது,' என்று கவலைப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X