பொது செய்தி

தமிழ்நாடு

கலப்பு பயிர் சாகுபடியில் அதிக லாபம்: வேளாண் விஞ்ஞானிகள் ஊக்குவிப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

அவிநாசி:'கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்வதன் மூலம், இயற்கை முறையில் பூச்சி களைக் கட்டுப்படுத்த முடியும்' என, வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பொங்கலுாரில் செயல்படும், வேளாண் அறிவியல் நிலைய திட்ட இயக்குனர் ஆனந்தராஜா, மண்ணியல் துறை வல்லுநர் தனசேகர் பாண்டியன் கூறியதாவது:கலப்பு பயிரின முறையை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். வயல் மட்டத்திலிருந்து, வரப்பு ஓரத்தில், மூன்றில் ஒரு பங்கு உயரத்தில், தட்டைப் பயறு விதைக்க வேண்டும்.
நிலக்கடலை பயிரோடு, ஆமணக்கு செடிகளை வயல் ஓரம், 2 மீ.,க்கு ஒரு செடி வீதம் நடவு செய்வதால், புரோடினியா புழுக்களை கவர்ந்து அழிக்கலாம். நிலக்கடலையுடன், 250 கிராம் கம்பு சேர்த்து, கலப்பு பயிராக விதைப்பதன் மூலம், நிலக்கடலையை தாக்கும் சுருள் பூச்சி, இலைப்பேன், மற்றும், அந்துப்பூச்சி சேதத்தை கட்டுப்படுத்தலாம்.சிவப்பு கம்பளிப்புழு தாக்குதல் காணப்படும் பகுதிகளில், ஐந்து வரிசை நிலக்கடலைக்கு, ஒரு வரிசை தட்டை பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். துவரை, பாசிப்பயறு ஆகியவற்றுடன் ஊடுபயிராக சோளம் பயிரிடுவதன் மூலம், தத்துப்பூச்சி மற்றும் காய்ப்புழு எண்ணிக்கையை கட்டுபடுத்தலாம்.பருத்தியுடன், சூரிய காந்தியை, 2:2 என்ற விகிதத்தில் பயிரிடுவதன் மூலம், பருத்தியை தாக்கும் பச்சை தத்துப்பூச்சியின் சேதம் குறைகிறது. பருத்தியுடன், பச்சைப்பயிர், உளுந்து, சோயாமொச்சை, ஆமணக்கு பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம், பருத்தியை தாக்கும் பூச்சிகளின் பெருக்கத்தை குறைத்து,சேதத்தை தவிர்க்கலாம்.
சோளத்துடன், அவரையை, 4:1என்ற விகிதத்தில் விதைத்து, சோளத்தண்டு புழுவின் சேதத்தையும், நிலக்கடலையுடன், கம்பு பயிரை, 6:1 என்ற விகிதத்தில் விதைப்பதன் மூலம், சுருள் பூச்சியின் சேதத்தையும் குறைக்கலாம். வெங்காயத்தை தாக்கும் பட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த, வரப்பு ஓரங்களில் ஆமணக்கை பயிரிடலாம்.கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்வதன் மூலம், இயற்கை முறையில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி, பயிர் மகசூலை அதிகரிப்பதோடு, பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகத்தை குறைத்து, சுற்றுப்புற சூழல், சுகாதாரத்தை பேணிக்காக்க முடியும். விவரங்களுக்கு, வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X