குழந்தைக்கு வயிற்றுப்போக்கு; சுகாதார நிலையத்தில் மாத்திரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு; சுகாதார நிலையத்தில் மாத்திரை

Added : மே 23, 2020
Share

திருப்பூர்:தமிழகத்தில், அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் வாயிலாக, தீவிர வயிற்றுபோக்கு தடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில், நிமோனியா காய்ச்சல் மற்றும் வயிற்றுபோக்கு கார ணமாக, குழந்தைகளின் உடல் நலன் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.இதனால், சுகாதாரமான சுற்றுப்புறம் மற்றும் ஆரோக்கியமான உடல் நிலையை பேண, பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வகையில், ஆண்டுதோறும், மே மாதம், தீவிர வயிற்றுபோக்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள், அங்கன்வாடிகள் செயல்படாததால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வாயிலாக மட்டும் தீவிர வயிற்றுபோக்கு தடுப்புக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, ஓ.ஆர்.எஸ்., கரைசல் மற்றும் சிங்க் மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X