சம்பவம் செய்தி

தமிழ்நாடு

15 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு ; சென்னையில் மட்டும் 10 ஆயிரம்!

Added : மே 23, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 15 ஆயிரத்தை தாண்டியது. இவர்களில், சென்னையில் மட்டும், 9,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சைக்கு பின், மொத்தம், 7,491 பேர் குணமடைந்த நிலையில், 103 பேர் உயிரிழந்து உள்ளனர். இது குறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு:நேற்று மட்டும், 12 ஆயிரத்து, 155 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் வாயிலாக, 759 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த, 24 பேர்; ராஜஸ்தான், ஆறு பேர், மேற்கு வங்கம், மூன்று பேரும் அடங்குவர். டில்லி, தெலுங்கானா, உத்தர பிரதேசம், ஆந்திராவில் இருந்து வந்த, நான்கு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் நேற்று, 625 பேருக்கு, தொற்று கண்ட றியப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு, 39 பேர்; திருவள்ளூர், 17 பேர்; காஞ்சிபுரம், 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த, 67 வயது முதியவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, 20ம் தேதி உயிரிழந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த, 75 வயது மூதாட்டி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த, சென்னையை சேர்ந்த, 68 வயது முதியவர், 54 வயது நபர் ஆகியோர், நேற்று முன்தினம் உயிரிழந்தனர். ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், 53 வயது நபர், நேற்று உயிரிழந்தார். இதுவரை கொரோனாவால், 103 பேர் உயிர் இழந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X