மூதாட்டியை தாக்கி நகை திருடியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டியை தாக்கி நகை திருடியவர் கைது

Added : மே 23, 2020
Share

திருப்பூர்:ஊத்துக்குளியில் மூதாட்டியை தாக்கி, நகை, பணத்தை திருடி சென்ற சம்பவத்தில், இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூரை அடுத்த முதலிபாளையம், ஹவுசிங் யூனிட், செந்தில் நகரை சேர்ந்தவர் காந்திமதி, 63. கடந்த, 18ல், மதியம் வீட்டில் தனியாக இருந்த அவரை, இருவர் தேங்காய கொண்டு முகத்தில் தாக்கி காயப்படுத்தி விட்டு, பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.இது குறித்து, ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் விசாரித்து வந்தனர். கூலிபாளையம் நால் ரோட்டில் இருவரை பிடித்து விசாரித்ததில், முத்தணம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 23 மற்றும் சரவணன், 24 என்பது தெரிந்தது.இருவரையும் கைது செய்து மூதாட்டி வீட்டில் திருடிய, 1.5 சவரன் நகை, 5 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X