பட்டாசு மருந்து நிரப்பிய பந்து: அவிநாசி அருகே பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாசு மருந்து நிரப்பிய பந்து: அவிநாசி அருகே பரபரப்பு

Added : மே 23, 2020
Share

அவிநாசி:அவிநாசி அருகே உப்பிலிபாளையத்தில், வீட்டின் முன் கிடந்த பட்டாசு மருந்து நிரப்பப்பட்ட பந்து பரபரப்பை ஏற்படுத்தியது.திருப்பூர் மாவட்டம், உப்பிலிபாளையம் முருகம்பாளையம் பகுதியில் வசிப்பவர் சிவராஜ், 28. விசைத்தறி கூட உரிமையாளர். அவரது வீட்டின் முன், துணியால் சுற்றப்பட்ட பந்து போன்ற உருளை இருந்தது. அது, வெடிபொருளாக இருக்கலாம் என்ற, பீதி கிளம்பியது.அவிநாசி போலீசார் சென்று சோதனையிட்டனர். திருப்பூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அதில், ஐஸ்கிரீம் நிரப்ப பயன்படுத்தப்படும் பந்து போன்ற உருளையில், பட்டாசு மருந்து துகள்கள் நிரப்பப்பட்டு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவற்றை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து, யாரும் புகார் தெரிவிக்கவில்லை.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X