அரசியல் செய்தி

தமிழ்நாடு

சலூன் செயல்பட அரசு அனுமதி ; முதல்வர் இ.பி.எஸ்.

Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 சலூன் செயல்பட அரசு அனுமதி ; முதல்வர் இ.பி.எஸ்.

சென்னை : 'சென்னை மாவட்டம் தவிர, இதர மாவட்டங்களில், முடி திருத்தும் சலுான் மற்றும் அழகு நிலையங்கள், இன்று முதல் இயங்கலாம்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.

அதே நேரம், 'ஏசி' பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், ஊரடங்கு அமலில் இருந்தாலும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, அரசு பல்வேறு தளர்வுகளை, அறிவித்து வருகிறது. ஊரகப் பகுதிகளில், மே, 19 முதல், முடி திருத்தும் நிலையங்களான சலுான்கள் இயங்க, முதல்வர் அனுமதி அளித்தார். கோரிக்கைஅதேபோல, நகரங்களிலும் திறக்க அனுமதிக்க வேண்டும் என, முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், சலுான்கள் மற்றும் அழகு நிலையங்கள், இன்று முதல் இயங்க, முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.

தினமும் காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை, இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதி களில் உள்ள, சலுான்கள் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களையும், பணியமர்த்தக் கூடாது. சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, ஊரகப் பகுதிகளை தவிர, தமிழகத்தின் அனைத்து ஊரகப் பகுதிகளிலும், இன்று முதல் அழகு நிலையங்கள் இயங்கவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


உறுதி செய்ய வேண்டும்



சலுான்கள் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள்மற்றும் வாடிக்கை யாளர்கள், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.பணியாளர்களுக்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கோ, காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களை அனுமதிக்கக் கூடாது.வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், கிருமிநாசினி கண்டிப்பாக வழங்குவதையும், முகக் கவசங்கள் அணிவதையும், உறுதி செய்ய வேண்டும். கடை உரிமையாளர், ஒரு நாளைக்கு, ஐந்து முறை, கிருமி நாசினியை தெளிக்க வேண்டும். வாடிக்கையாளர்களும், பணியாளர்களும், அடிக்கடி சோப்பால் கை கழுவு வதை, உறுதி செய்ய வேண்டும். 'ஏசி' இருந்தால், அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது. இவ்வாறு, முதல்வர் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-மே-202005:23:32 IST Report Abuse
skv srinivasankrishnaveni அப்பாடி தாதிகள் எல்லாம் ஒளியுமா எவன் மூஞ்சியும் பாக்க சகிக்கலே பார்த்தாலே பூச்சாண்டியாட்டம் திரியுதுங்க பொறாததுக்கு சொரிஞ்சுண்டே திரியுதுங்க பென்பிடிச்சவன் தலை சொரியறாப்பல.பார்த்தாலே பிச்சைக்காரர் போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X