அமெரிக்க பார்லி.,யில் புது தீர்மானம்

Added : மே 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வாஷிங்டன் : அமெரிக்காவில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கு, 'எச்1பி' விசா வழங்கும் வகையில், அமெரிக்க பார்லி.,யில், தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுவதற்கு, எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா முன்னிலையில் உள்ளது.ஊரடங்கு அமலால், அமெரிக்கர்கள் பலர் வேலையிழந்துள்ளனர். அதனால், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆண்டுக்கு, 85 ஆயிரம் வெளிநாட்டவருக்கு, எச்1பி விசா வழங்க சட்டம் அனுமதி அளிக்கிறது. அதே நேரத்தில், இந்தாண்டில், 2.75 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதில், 67 சதவீதம் பேர் இந்தியர். இந்நிலையில், அமெரிக்க பார்லி.,யின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில், ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திறமையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு எச்1பி விசா வழங்கி, வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். இதற்காக, விசா நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கல்லுாரிகள், பல்கலைகளில், சீனாவுக்கு அடுத்ததாக, இந்தியர்களே அதிக அளவில் படிக்கின்றனர். தற்போதைய நிலையில், இரண்டு லட்சம் இந்திய மாணவர்கள், அமெரிக்காவில் படிக்கின்றனர். இந்த புதிய தீர்மானம் நிறைவேறினால், இந்திய மாணவர் களுக்கு அதிக பலன் கிடைக்கும்.சர்ச்சையில் பிடன்இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ள, முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன், சர்ச்சையில் சிக்கினார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 'அதிபர், டொனால்டு டிரம்பை ஆதரிக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், கறுப்பினத்தவர்களே அல்ல' என, அவர் கூறினார். இன ரீதியிலான அவருடைய கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா தீர்மானம் நிறைவேற வாய்ப்பே இல்ல ராஜா வாய்ப்பே இல்ல... அமெரிக்க நிறுவனங்கள் ஒரு கடைநிலை ஊழியருக்கு கூட முன் அனுபவம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். நமது மாணவர்கள் அங்கு போனாலும் குறைந்து 2 வருடங்கள் ஆகும் முறையாக வேலை கற்றுக்கொள்ள. அதுவரை அங்கிருக்கும் நிறுவனங்கள் சம்பளம் மட்டுமே கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும். ஆனால் அதுவே இந்தியா என்றால் வைத்து அடிக்கும் அடியில் ஒரு வருடத்திலேயே பெரும்பாலான வேலைகளை கற்றுக்கொள்ள வைக்க முடிகிறது. இங்கிருந்து செல்பவர்கள் முதல் நாளிலேயே வேலை செய்ய தொடங்கி விடுவார்கள். மாணவர்கள் செலுத்தும் பணம் அமெரிக்க கல்வி நிறுவனங்கள் சம்பாதிக்க மட்டுமே உதவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X