சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய போலீசார்

Added : மே 24, 2020
Share
Advertisement

கோவை:கோவை சிங்காநல்லுார் ராமானுஜர் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, 42; எலக்ட்ரீசியன். மனைவி எலிசபெத் ராணி, 28; தனியார் நிறுவன ஊழியர்.ஆரோக்கியசாமி மதுபோதையில் தன்னையும், தன் குழந்தைகளையும் துன்புறுத்துவதாக, சிங்காநல்லுார் போலீசாரிடம் எலிசபெத் ராணி நேற்று முன்தினம் புகார் தெரிவித்தார்.இதுகுறித்து விசாரிக்க ஏட்டு ரவிகுமார், ஊர்க்காவல் படையை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர், அவர் வீட்டுக்குச் சென்றனர். வீட்டின் கதவு உட்புறமாக, தாழிடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக வீட்டினுள் பார்த்தனர். அப்போது ஆரோக்கியசாமி சேலையால், தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே சென்ற போலீசார் அவரை மீட்டனர். '108' ஆம்புலன்ஸ் வரவழைத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவர் உடல் நலம் தேறியுள்ளார்.தக்க தருணத்தில் அவரை காப்பாற்றிய ஏட்டு, ஊர்காவல் படை வீரர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X