சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரிவாள் காட்டி மிரட்டி அடகு கடையில் கொள்ளை

Added : மே 24, 2020
Share
Advertisement
 அரிவாள் காட்டி மிரட்டி  அடகு கடையில் கொள்ளை

திருப்பூர்:திருப்பூரில், நகை அடகு கடையில் அரிவாளை காட்டி மிரட்டி, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், குமரன் ரோட்டில், 'அட்டிகா' கோல்டு என்ற நகை அடகு கடை செயல்பட்டு வருகிறது. கடந்த, 19ல், 'ஹெல்மெட்' அணிந்தபடி கடைக்குள் நுழைந்த ஆசாமி, ஊழியர்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி, 10 சவரன் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றார்.
திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தனர்.குமரன் ரோடு, காலேஜ் ரோடு உட்பட சில இடங்களில் இருந்த, 'சிசிடிவி' பதிவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஆசாமியின் நடமாட்டம் தெரிந்தது. விசாரணையில், காவிலிபாளையத்தை சேர்ந்த அலகுவேல், 35 என்பவரை கைது செய்து, ௨0 சவரன் மற்றும் 20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறுகையில், 'சேலம், ஆத்துாரை சேர்ந்த அலகுவேல், திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இரு மாதம் முன், சிறுபூலுவபட்டியில் தனியாக இருந்த மூதாட்டியிடம், கத்தியை காட்டி மிரட்டி, ௧0 சவரன் நகையை திருடி சென்றுள்ளார். வேறு ஏதேனும், திருட்டில் இவருக்கு தொடர்புள்ளதா என்று, தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X