பொது செய்தி

தமிழ்நாடு

கோவை அதிகாரி கரூருக்கு மாற்றம்

Added : மே 24, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாநகராட்சி நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், கரூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனராக, இட மாற்றம் செய்யப்பட்டார்.நகர் நல அலுவலராக, டாக்டர் சந்தோஷ்குமார், 2015, மார்ச்சில் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான மருத்துவ குழு, தீவிரமாக களமிறங்கி, கொரோனா நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது.இச்சூழலில், இவர் கரூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனராக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சிக்கு புதிதாக நகர் நல அலுவலர் நியமித்தபின், அவரை விடுவிக்க, கமிஷனர் ஷ்ரவன்குமார் முடிவு செய்துள்ளார். அதே நேரம், செய்தி - மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்த மதியழகன், அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 'நிர்வாக நலன்' கருதி விடுவித்திருப்பதாகவும், உரிய பணியிடத்தை, செய்தி - மக்கள் தொடர்பு துறையில் பெற்றுக் கொள்ளும்படியும், கமிஷனர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X