குன்னுாரில் மீண்டும் சிறுத்தை விசிட்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குன்னுாரில் மீண்டும் சிறுத்தை 'விசிட்'

Added : மே 24, 2020
Share
 குன்னுாரில் மீண்டும்  சிறுத்தை 'விசிட்'

குன்னுார்:குன்னுார் அட்டடி பகுதியில் மீண்டும் வந்த சிறுத்தையால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சி, அட்டடி அருகில் அடர்ந்த வனப்பகுதி உள்ளதால், அவ்வப்போது வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்கின்றன. நேற்று மாலை, 5:30 மணியில் இருந்து, 6:30 மணி வரை, அப்பகுதியில் உள்ள பாறையில் சிறுத்தை அமர்ந்து ஓய்வெடுத்துள்ளது. இதற்கு முன்னரும், ஓரிரு முறை இப்பகுதியில் சிறுத்தை தென்பட்டுள்ளது.அட்டடி பகுதியை சேர்ந்த டைட்டஸ் ஜான் கூறுகையில்,''ஊரடங்கு காரணமாக ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால், பாறையில் சிறுத்தை ஒய்வெடுத்து வருகிறது. சிறுத்தை நடமாட்டத்தால், இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X