அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு எச்சரிக்கை மணி! வானதி சீனிவாசன் ஆவேசம்

Added : மே 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தி.மு.க.,வுக்கு எச்சரிக்கை மணி! வானதி சீனிவாசன் ஆவேசம்

கோவை:''தி.மு.க., அமைப்பு செயலாளர் பாரதி கைது, தி.மு.க.,வுக்கும் அக்கட்சி பேச்சாளர்களுக்கும் எச்சரிக்கை மணியாக பார்க்கிறோம்,'' என, பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.'கோவை மக்கள் சேவை மையம்' சார்பில் முடி திருத்தும் தொழிலாளர்கள், சிறு கோவில் பூசாரிகள் உட்பட, 200 பேருக்கு, 'மோடி கிட்' வழங்கும் நிகழ்ச்சி, காந்திபுரத்தில் நேற்று நடந்தது.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு செயலாளர் (தமிழ்நாடு, கேரளா) நாகராஜ், பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர், மளிகை பொருட்கள் அடங்கிய 'மோடி கிட்' வழங்கினர்.வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:'கொரோனா' ஆரம்பம் முதலே, பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சார்பு அமைப்பினர் மக்களுக்கு உதவிசெய்து வருகின்றனர். தமிழகத்தில் 'மோடி கிச்சன்' வாயிலாக, தினமும் லட்சக்கணக்கில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
40 லட்சம் முகக்கவசங்களும் வழங்கப்பட்டுள்ளன. கோவையில் ஏற்கனவே, 1,500 பேருக்கு 'மோடி கிட்' வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று(நேற்று), 200 பேருக்கு, தலா 800 ரூபாய் மதிப்புள்ள 'மோடி கிட்' வழங்கியுள்ளோம்.தி.மு.க., மாநில துணை பொதுச்செயலராக இருந்த துரைசாமி பா.ஜ.,வில் இணைந்துள்ளார். பா.ஜ,, மீது இருக்கும் அபிமானம், மரியாதை காரணமாக, மாற்றுக் கட்சியினருக்கு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் உருவாகி வருவதை வரவேற்கிறோம். தி.மு.க., அமைப்பு செயலாளர் பாரதி கைது என்பது, தி.மு.க.,வுக்கும், அதன் பேச்சாளர்களுக்கும் எச்சரிக்கை மணியாக பார்க்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shanmugam -  ( Posted via: Dinamalar Android App )
24-மே-202008:04:00 IST Report Abuse
Shanmugam நியாயமான அரசு நடவடிக்கை என்றால் எச் ராஜா உதிர்த்த முத்துக்களுக்கும் சேர்த்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பலரின் மனதை புண்படுத்தி பேசுவது வாடிக்கையாக கொண்டு ராஜாவை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்க தெரிந்தும் கண்டுக்காமல் இருக்கும் மாநில அரசின் முதுகெலும்பு இல்லாத தன்மையை எண்ணி ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஜெயலலிதா என்ற ஆளுமை இருந்தவரை அடையாளமே தெரியாமல் இருந்த பாஜகவுக்கு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு இருப்பவர்களை கையை முறுக்கி பின்பக்கமாக இருந்துகொண்டு அரசசை இயக்கும் இந்த தன்மையை தமிழக மக்கள் முழுவதுமாக உணர்ந்து இருக்கிறார்கள். இந்த மாதிரி செயல்பாடு மேலும் மேலும் பாஜகவின் மேல் வெறுப்பு அவநம்பிக்கை தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பாஜக என்ற கட்சியின் நல்ல மனிதர்களான வாஜ்பாய் போன்றவர்கள் இருந்தபோது அந்த கட்சிக்கு கிடைத்த அபிமானம் மரியாதை தமிழகத்தில் கிடைத்த ஆதரவு என்பது நன்கு அனைவருக்கும் தெரியும். ஏகோபித்த ஆதரவு என்று தமிழகத்தில் பாஜகவுக்கு என்றும் கிடைக்க வாய்ப்பே இல்லை ஏனென்றால் மக்களுக்கு உண்மை என்ன என்பது கல்வி மூலம் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏமாற்று வித்தைகள் வடநாட்டில் செல்லுபடியாகும், ஆனால் தமிழகத்தில் மக்கள் கல்வி கற்று முன்னேறி இருக்கிறார்கள். அவர்களிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி மக்களை திசைதிருப்பி உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை திசை திருப்புவது என்பது வடநாட்டில் செய்யும் டெக்னிக், அதையே இங்கே செய்ய முயற்சிக்கிறார்கள். அது செல்லுபடியாகாது என்பதை பலமுறை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். 2019 பொதுத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக எவ்வளவு வாக்குகள் பெற்றனர் என்பதை எலக்சன் வெப்சைட்டில் போய் பார்த்தால் இருக்காது. எலக்சன் கமிஷன் biased ஆக இல்லாமல் செயல்படும் என்றால் அந்த தகவலையும் அங்கே பதிவிட வேண்டும். மற்ற கட்சிகள் எவ்வளவு பெற்றார்கள் என்பது அங்கே கணக்கு இருக்கும். பாஜக தமிழகத்தில் எவ்வளவு பெற்றது என்பது அங்கே கணக்கு இருக்காது. இவ்வளவு தூரம் அனைத்து அமைப்புகளையும் கையை முறுக்கி தனக்கு வேண்டியதை மட்டுமே செய்ய வைக்கும் இந்த நிலைமை மக்கள் பார்த்து புரிந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X