தி.மு.க.,வுக்கு எச்சரிக்கை மணி! வானதி சீனிவாசன் ஆவேசம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு எச்சரிக்கை மணி! வானதி சீனிவாசன் ஆவேசம்

Added : மே 24, 2020 | கருத்துகள் (1)
Share
 தி.மு.க.,வுக்கு எச்சரிக்கை மணி! வானதி சீனிவாசன் ஆவேசம்

கோவை:''தி.மு.க., அமைப்பு செயலாளர் பாரதி கைது, தி.மு.க.,வுக்கும் அக்கட்சி பேச்சாளர்களுக்கும் எச்சரிக்கை மணியாக பார்க்கிறோம்,'' என, பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.'கோவை மக்கள் சேவை மையம்' சார்பில் முடி திருத்தும் தொழிலாளர்கள், சிறு கோவில் பூசாரிகள் உட்பட, 200 பேருக்கு, 'மோடி கிட்' வழங்கும் நிகழ்ச்சி, காந்திபுரத்தில் நேற்று நடந்தது.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு செயலாளர் (தமிழ்நாடு, கேரளா) நாகராஜ், பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர், மளிகை பொருட்கள் அடங்கிய 'மோடி கிட்' வழங்கினர்.வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:'கொரோனா' ஆரம்பம் முதலே, பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சார்பு அமைப்பினர் மக்களுக்கு உதவிசெய்து வருகின்றனர். தமிழகத்தில் 'மோடி கிச்சன்' வாயிலாக, தினமும் லட்சக்கணக்கில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
40 லட்சம் முகக்கவசங்களும் வழங்கப்பட்டுள்ளன. கோவையில் ஏற்கனவே, 1,500 பேருக்கு 'மோடி கிட்' வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று(நேற்று), 200 பேருக்கு, தலா 800 ரூபாய் மதிப்புள்ள 'மோடி கிட்' வழங்கியுள்ளோம்.தி.மு.க., மாநில துணை பொதுச்செயலராக இருந்த துரைசாமி பா.ஜ.,வில் இணைந்துள்ளார். பா.ஜ,, மீது இருக்கும் அபிமானம், மரியாதை காரணமாக, மாற்றுக் கட்சியினருக்கு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் உருவாகி வருவதை வரவேற்கிறோம். தி.மு.க., அமைப்பு செயலாளர் பாரதி கைது என்பது, தி.மு.க.,வுக்கும், அதன் பேச்சாளர்களுக்கும் எச்சரிக்கை மணியாக பார்க்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X