பொது செய்தி

இந்தியா

காரைக்கால் - திருவாரூர் இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்

Added : மே 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

காரைக்கால் : காரைக்கால் - திருவாரூர் இடையே, மின்சார ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. ஊரடங்கிற்கு முன், காரைக்காலில் இருந்து, சென்னை, பெங்களூரு, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினசரி ரயில்கள் இயக்கப்பட்டன.

பயணியர் கோரிக்கையை ஏற்று, காரைக்கால் - திருவாரூர் ரயில் பாதை, மின்மயமாக்கப்பட்டு உள்ளது. இப்பாதையில், சோதனை ஓட்டம் மேற்கொள்ள, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர், மனோகரன் தலைமையில், திருச்சி கோட்ட மேலாளர், அஜித்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், நேற்று மதியம் சிறப்பு ரயில் வாயிலாக, திருவாரூரில் இருந்து, காரைக்கால் ரயில் நிலையத்துக்கு வந்தனர். ரயில்வே ஸ்டேஷனில், மின் வினியோக கட்டுப்பாட்டு அறை, தண்டவாளங்களை ஆய்வு செய்தனர்.

பின், 2:30 மணிக்கு மின்சார இன்ஜின் பொருத்திய, ரயில் வாயிலாக அதிகாரிகள் சோதனை ஓட்டம் மேற்கொண்டனர். பாதுகாப்பு ஆணையர் மனோகரன் கூறியதாவது:காரைக்கால் - திருவாரூர் இடையே மின்மயமாக்கப்பட்ட பாதை ஆய்வு செய்யப்பட்டது. தண்டவாளத்தின் பாதுகாப்பு குறித்து, பல்வேறு சோதனை மேற்கொள்ளப்பட்டது.இப்பாதையில் மூன்று கட்டமாக சோதனை ஓட்டம் நடைபெறும். 75 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
24-மே-202017:58:23 IST Report Abuse
வாய்மையே வெல்லும் கண்டிப்பா டிக்கெட் பரிசோதகரை போடுங்கப்பா.. இனிமேலாவது இந்தியா நிம்மதியா இருக்கட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X