பொது செய்தி

தமிழ்நாடு

ரம்ஜான் கட்டுரைகள்

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020
Share
Advertisement
இரவின் மடியில்!இஸ்லாம் கற்றுத் தந்த வாழ்க்கைப் பாதை!அன்று ரோமப் பேரரசின் சக்கரவர்த்தியாக சீசர் ஆண்டபோது, அவருக்கு ஒரு மடல் வந்தது. அதில், இஸ்லாத்தின் சிறப்பை விளக்கி இணைந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அனுப்பியவர், நபிகள் பெருமான்.மடலின் உறுதியைத் தெளிவுற தெரிந்து கொள்ள விரும்பிய மாமன்னர், அரபு தேசத்துப் பிரஜைகள் எவரையாவது தம் முன் கொண்டு வந்து
 ரம்ஜான் கட்டுரைகள்

இரவின் மடியில்!

இஸ்லாம் கற்றுத் தந்த வாழ்க்கைப் பாதை!

அன்று ரோமப் பேரரசின் சக்கரவர்த்தியாக சீசர் ஆண்டபோது, அவருக்கு ஒரு மடல் வந்தது. அதில், இஸ்லாத்தின் சிறப்பை விளக்கி இணைந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அனுப்பியவர், நபிகள் பெருமான்.மடலின் உறுதியைத் தெளிவுற தெரிந்து கொள்ள விரும்பிய மாமன்னர், அரபு தேசத்துப் பிரஜைகள் எவரையாவது தம் முன் கொண்டு வந்து நிறுத்தப் பணித்தார்.

அதன்படி, வீரர்கள் கையில் அகப்பட்டவர், மக்கத்தின் அபூஸூபியான்; நபிகளாரின் துாரத்து உறவுமுறையாளர். ஆனால், அவர் அப்போது இஸ்லாமை தழுவவில்லை; இணை வைப்புக் கொள்கையைக் கைக்கொண்டவர்.மாமன்னரின் ஐயப்பாட்டு கேள்விக் கணைகளுக்கு எல்லாம் அவர் தாம் பதில் தரும் விளக்கமாக இருந்தார். தமக்கு கிடைத்த வாய்ப்பைத் தவற விடக்கூடாது. உண்மைக்கு மாற்றமாக நபிகளுக்கு எதிராக மொழிய வேண்டும் என்று தான் முதலில் அவர் உறுதி கொண்டிருந்தார். ஆனால், உண்மையை தவிர பொய் பேசினால் தலை தப்பாது எனும் மன்னர் உத்தரவால், அவர் உண்மைகளை மட்டுமே மொழிந்தார்.அவரது பதில்கள் வெறும் பதில்கள் அல்ல.

தம்மையறியாமலே மாணிக்க கற்களால் ஆன கிரீடத்தை நபிகளுக்கு சூட்டிக் கொண்டிருந்தார். எதிரிகள் வாயாலேயே, புகழப்பட்டவரானார், நபிகள்.ஏற்றிப் போற்றத்தக்க அத்தனை ஒழுக்கங்களில் இருந்தும் வழுவாதவரான, நபிகளைப் பற்றி ஸூபியான் போட்டு வைத்த ஆசனம், மன்னர் தலைமையை விட விஞ்சி நின்றது. அது கேட்ட மன்னர் சொன்னார்-'இறுதி காலத்தில் ஒரு தீர்க்கதரிசி வருவார் என்பதறிவேன். ஆனால், அவர் அரபிக் குலத்தில் என்று நினையேன். நான் நினைப்பது உண்மை என்றால், அனைத்துத் தடைகளையும் கடந்து அவர் மார்க்கம் வெல்லும். அரசாட்சியின் மேல் எனக்கு ஆவல் இல்லையென்றால், நான் அவரைப் பின் தொடர்வேன்; அவர் பாதம் கழுவுவேன்...' என்று சொன்னார், சீசர். சீசர் ஆய்வாளர் அல்ல, ஞானியும் அல்ல. ஆனால், அவர் சொன்னது உண்மை.

ஏனெனில், ஒரு மன்னருக்குரிய தொலைதுாரப் பார்வை அவருக்கு இருந்தது. அதோடு பழைய வேதங்களின் சில கருத்துக்களிலும் அவருக்கு உடன்பாடு இருந்தது.இன்று, உலகின் அறுவரில் ஒருவர் முஸ்லிம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இஸ்லாம் உலகை நிறைத்திருக்கிறது. இன்னும் நிறைந்துக் கொண்டு வருகிறது. அதற்குக் காரணம் இஸ்லாத்தின் போதகர், முஹம்மது நபிகள்!பிறந்த பெண் குழந்தைகளை, பாலை மணலில் புதைத்து விடுகிற வன்கொடுமை வழக்காகி இருந்த ஒரு தேசத்தில், கொலையும், களவும், மதுவும், மாதுவும், வாழ்வின் இலக்கணங்களாக எழுதப்பட்ட ஒரு பெரு நிலத்தில், குறியும் கோளும் சூதாட்டமும் சோதிடமும் நிறைந்து கிடந்த காட்டரபிகளிடம் தம்மை இறை துாதர் என வாதிட்டு வெற்றி பெறுவது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியமல்ல...

ஆனால், அதை சாதித்து காட்டினார் நபிகள் நாயகம். அடக்கு முறையால் அல்ல... உண்மையால் அன்பால் தன் நன்னடத்தையால் நாகரிகப் பண்பால்.நாற்பது வயதில் அவருக்கு நபிப் பட்டம் அருளப் பெற்ற போது, அதை ஏற்றுக் கொண்டவர்கள் வெகு சிலரே. அவரது, 63வது வயதில் அவரது மரணத்தருவாயில் இஸ்லாம் இந்த உலகத்தையே அடைத்து, நிறைந்த ஆலமரமாய் வளர்ந்து நின்றது. விடுபட்ட சில தேசங்களும் அவரின் தோழர்கள் காலத்தில் முழுமையாக இஸ்லாத்தின் பிடிக்குள் வந்தன.ஆயிரத்தி நானுாறு ஆண்டுகளுக்கு முன் அரபகத்தில், அன்னை ஆமீனாவுக்கும், தந்தை அப்துல்லாவுக்கும் அருந்தவப் புதல்வராய் முஹம்மது எனும் மாமனிதர் பிறந்தார்.வாய்மையே பேசிய, யாருக்கும் தீங்கு செய்யாத பாவக்கறை படாத நபிகள், உண்மையாளர் (அல் -அமீன்) என்றும், நம்பிக்கையாளர் (அஸ்-ஸாதிக்) என்றும் அழைக்கப்பட்டார்.

ஆடு மேய்த்து தன் வாழ்க்கையை துவங்கியவர் தாம், நபிகள் நாயகம். கடைத் தெருவுக்கு செல்வதாக இருந்தால் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போய் நின்று, 'இதோ முஹம்மது கடைக்கு போகிறேன். உங்களுக்கு தேவையானதை சொன்னால் வாங்கி வருகிறேன்...' என்பார்.ஊரின் செல்லப்பிள்ளை அவர். திருமணம் முடிந்து, அன்னை கதீஜா, கணவருக்கு ஓர் அடிமையை பரிசாய் வழங்கினார். நபிகளார் அடிமையை பெற்ற கணமே விடுதலை செய்து, அவரின் பெற்றோருடன் அனுப்ப விழைந்தார். ஆனால், அந்த அடிமையோ முஹம்மதுவுடன் தான் இருப்பேன் என அடம் பிடித்தார். அவர் தான் ஸைத். பின்னாளில் நபிகளின் வளர்ப்பு மகன் ஆனார்.முஹம்மதின், 40வது வயதில் நபிப் பட்டம் அருளப்பட்டது. மக்காவில், 13 ஆண்டுகள் இறை செய்தியை பரப்பினார், நபிகள் நாயகம். ஏற்றுக் கொண்டவர் சிலர், ஏற்றுக் கொள்ளாமல் முரண்டு பிடித்தவர் பலர். 13 ஆண்டுகளுக்கு பிறகு இறை கட்டளையை ஏற்று மதீனா புறப்பட்டார், நபிகள் நாயகம். அந்த பயணத்தை தான், 'ஹிஜ்ரத்' என்று இஸ்லாம் புத்தாண்டாக்கி மகிழ்கிறது.

மதினாவில், 10 ஆண்டுகள் என, மொத்தம், 23 ஆண்டுகளில் அவர் எடுத்துச் சொன்னது தான், இஸ்லாம்.தனக்கேற்பட்ட எல்லா துயரங்களையும் தனிமனிதராய் மன்னித்துவிட தயாராய் இருந்தார், நபிகள் நாயகம். ஆனால், மக்க - மதீன மக்களின் மாண்புக்குரிய மன்னராக அவரை மக்கள் தேர்ந்தெடுத்த பிறகு, கலகக்காரர்களுக்கு பாடம் கற்றுத் தர வேண்டிய பொறுப்பு அவருக்கு முளைத்தது. போரில் தோல்வியுற்று நிற்கும் எதிரிகளை விடுதலை செய்ய, நபிகள் நாயகம் ஒரு புது வழியை கையாண்டார். கல்வி கற்றவர்கள், கல்லாத ஒவ்வொரு, 10 பேருக்கும் கல்வி சொல்லிக் கொடுத்து விடுதலை பெறும் வழி. சிறைக்கோட்டம் கல்விக் கோட்டமாக மாறியது.சொல்லுக்கும், செயலுக்கும் வித்தியாசமில்லாத வாழ்க்கை வாழ்ந்தார், நபிகள் நாயகம். ஒரு முறை, நபிகள் நாயகத்தின் இளம் மனைவி அன்னை ஆயிஷாவிடம் கேட்கப்பட்டது...

'நபிகளாரின் வாழ்க்கை எப்படி இருந்தது?' 'நபிகளாரின் வாழ்க்கை குர்ஆனாக இருந்தது!' என்று, அவர் பதில் தந்தார்.அதைபோல நபிகளாரிடம், 10 ஆண்டுகள் பணி செய்த, அனஸ் எனும் தோழர் இப்படி சொன்னார்... 'இத்தனை ஆண்டு கால நபிகளுடனான என் வாழ்வில் ஒரு முறை கூட, 'சீ' என்ற சொல்லை நான் அவர்கள் வாயிலிருந்து கேட்டதில்லை...'இஸ்லாம், வாளால் பரப்பப்பட்டது என்பது ஒரு அபவாதம். எல்லாருக்குமான சமாதானமிக்க ஏற்றம்மிக்க ஓரிறை கோட்பாட்டை, நபிகளார் மனித சமுதாயத்தின் முன் வைத்தார். அதில் மட்டும் அவர் சமரசம் செய்து கொள்ளவே இல்லை.அமெரிக்காவில் கறுப்பின மக்களின் அடிமை விலங்கை அறுத்தெறிந்த, ஆபிரகாம் லிங்கனுக்கு முன்னோடி தான், நபிகள் நாயகம். 'உழைப்பவருக்கே உலகம் சொந்தமாக வேண்டும்' என்றான் கார்ல் மார்க்ஸ். 'உழைப்பாளியின் வியர்வை காயும் முன்னே கூலியை கொடுத்து விடுங்கள்' எனக் கூறிய கார்ல் மார்க்ஸை முந்திக் கொண்டவர், நபிகள் நாயகம். 'தோழர்களே...' என்றழைத்து ஒரு புதிய நடைமுறையை கொண்டு வந்தனர் கம்யூனிஸ்ட்கள்.

ஆனால், அதற்கு முன்னரே தம்முடைய நண்பர்கள் அனைவரையும், தோழர்கள் என அழைத்து நட்புக்கு புதிய விளக்கம் தந்தவர், நபிகள் நாயகம். ஸஹாபாக்கள் என்பதற்கு, தோழர்கள் என்பதே பொருள். சமத்துவத்தையும், சமச்சீர்மையையும், 1,400 ஆண்டுகளுக்கு முன் விதைத்து சென்றவர், நபிகள்.ரமலானில் பெரும்பாலும் வழங்கப் பெறும் கட்டாயமாக விதிக்கப் பெற்ற, 2.5 சதவீத ஏழை வரி, உலகின் கண்ணோட்டத்தில் மிக மிக உயர்வானது.இன்று, அரபு நாடுகளில் தீக்குளித்தல் இல்லை. மாமியார் - மருமகள் சண்டை இல்லை, ஸ்டவ் வெடிப்பு இல்லை. உண்ணாவிரதங்கள் இல்லை. ஊதாரிகளாக ஊர் சுற்றும் வழக்கம் இல்லை. திருட்டு - விபசார கொலைகள் இல்லை. விவாகரத்து அதிகம் இல்லை.ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் இல்லை. 50 வயதில், 60வது முறையாக ஒருவன் சிறைக்கு சென்று திரும்பும் வழக்கமில்லை. 70 வயது காமுகன், 5 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்வது இல்லை. நடைமுறை வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது.

'உங்களில் உங்கள் பெண்களுக்கு நல்லவரே இறைவனிடமும் நல்லவர். நான், என் பெண்களிடம் நல்லவனாக இருக்கிறேன்' என்றார், நபிகளார். மூன்றில் ஒரு பங்கு உணவு, ஒரு பங்கு நீர், ஒரு பங்கு வெற்றிடம் என்ற நபிகளின் உணவு உண்ணும் முறை அற்புதமானது. ஏழைகளின் வாழ்வோடு விளையாடும் வட்டியை ஒழித்து, உண்மையான பொருளியலுக்கு அடிகோலினார், நபிகள் நாயகம். 'ஆற்றின் கரையில் இருந்து நீ தொழுகைக்கு சுத்தம் செய்தாலும், நீ ஒரு கையளவு நீருக்கு அதிகம் செலவு செய்யாதே' என நீர் மேலாண்மைக்கு விடையளித்தார், நபிகள் நாயகம்.நபிகளின் போதனைகள் அனைத்தும் வாழ்க்கைக்கும், நாட்டுக்கும் நலம் பயப்பவை. நபிகள் சுருக்கமாக பேசுவார். ஆனால், விளக்கமான கருத்துக்கள் இருக்கும். நடுத்தர உயரம், உலகில் எவருக்கும் இல்லாத பேரழகு, நடை உடை பாவனைகளில் நடுத்தரம், எப்போதும் சிரித்த முகம்.

ஏழைகளிடம் இரக்கம், பெரியவர்களிடம் மரியாதையும், கண்ணியமும், நண்பர்களிடம் அதிக அன்பும் பாசமும், எவருக்கும் முந்தி ஸலாம் சொல்லும் பண்பு.எங்கே இடம் கிடைத்தாலும் அமர்ந்து கொள்ளும் இணக்கம், எவரினிலும் தன்னை தனித்து காட்டிக் கொள்ளாத நயம், பேச்சிலே இனிமை, அனைத்திலும் முதலிடம்... அதனால் தான், நபிகள் நாயகத்துக்கு உலக நாயகர்களின் வரிசையில் முதலிடம் கொடுத்தார், மைக்கேல் ஹார்ட்.இறைவனும், நபிகள் நாயகத்தை முன்னிலை படுத்துகிறான், முன்மாதிரி என்கிறான். புகழுக்குரியவராக சிறப்பிக்கிறான், அவர் பெயரின் பொருளே புகழப்பட்டவர் என்பதே. அருள்மறை இப்படி கூறுகிறது. 'உமது புகழை நாமே உயர்த்தினோம்...!' இறைவன் உயர்த்திய புகழை எவர் வந்து என்ன செய்ய முடியும்!அது, உலகம் உள்ளவரை மட்டுமல்ல, மறுமையிலும் உயர்த்தப்பட்ட புகழ்!இறைவனின் படைப்பில், இரட்டைகள் அற்புதம். இருள் - -ஒளி, நன்மை- - தீமை, விருப்பு- - வெறுப்பு என இந்தப் பட்டியல் நீளும்.

இவற்றில் ஒன்று மனிதனுக்கு விருப்பமாயும், மற்றொன்று வெறுப்பாயும் அமைவது இயல்பு.எனினும், இறைவனின் படைப்பில் இரண்டுமே மனிதனுக்கு நன்மையானது தான். இவனது அறியாமையால் இன்னொன்றை தொடர்ந்து தவிர்த்து வருகிறான். அதனால், அதில் ஒளிந்து கிடக்கிற நன்மைகளை பெற முடியாமல் போய் விடுகிறான். அதில் ஒன்று, இருள்.இருள் குறித்த சில வசனங்களை நாம் பார்க்கலாம்... நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணம் போன்றது. நெருப்பானது அவனைச் சுற்றிலும் ஒளி வீசிய போது அல்லாஹ் அவர்களது ஒளியை பறித்து விட்டான். இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான் (அல்குர் ஆன் 2-17)  அல்லது காரிருளில் இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடும் மழை கொட்டும் மேகம். இதில் அகப்பட்டுக் கொண்டோர் மரணத்திற்கு அஞ்சி இடியோசையால் தங்கள் விரல்களை தன் காதுகளில் வைத்துக் கொள்கின்றனர் (அல்குர் ஆன் 2-19) அம்மின்னலானது அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம் அவர்கள் அதன் துணையால் நடக்கின்றனர். அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும்போது, வழியறியாது நின்று விடுகின்றனர். (அல்குர் ஆன் 2-20) அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகிறான்.

ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ வழி கெடுக்கும் சைத்தான்கள் தான் அவர்களின் பாதுகாவலர்கள். அவை, அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள். அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர் (அல்குர் ஆன் 2-257) - இவ்வசனங்களில் இருள் துன்பத்தின் குறியீடாகவும், ஒளி நன்மை மற்றும் இன்பத்தின் குறியீடாகவும் சொல்லப்பட்டுள்ளது. இது, பொது நம்பிக்கையின் அடிப்படையில் உள்ளது. ஏனெனில், இருள் எல்லா நிலைகளிலும், துன்பத்தின் குறியீடாக இருந்ததில்லை. சில நேரங்களில் மாபெரும் வளர்ச்சிக்கு அடிநாதமாக அந்த இருளே இருந்திருக்கிறது.

குழந்தை உருவாகும் கர்ப்ப அறை குறித்து, இவ்வாறு பேசுகிறது அல்குர் ஆன்...'உங்கள் தாšய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக, மூன்று இருள்களுக்குள் உங்களை வைத்து படைக்கிறான் (அல்குர் ஆன் 39-6) அந்த மூன்று இருள் என்ன என்பதை தாயின் அடிவயிறு, கர்ப்பப் பையின் சுவர் மற்றும் குழந்தையைச் சுற்றி இருக்கும் சவ்வுப் படலம் என விளக்கம் அளிக்கிறது அறிவியல். இருள் மனிதனுக்கு துன்பம் மட்டுமே தரும் என்று இருந்தால், அவன் உருவாகும் இடத்தை இறைவன் இப்படி வைத்திருப்பானா... இல்லை, இருள் அவனை உருவாக்குவதில் மாபெரும் பங்கு வகிக்கிறது. இரவின் கடைசிப் பகுதியில், முதல் வானத்தில் இறங்குகிறான் இறைவன். தன் அடியார்களிடம் கேட்கிறான். என்னிடம் பாவமன்னிப்பு கேட்பவர் இருக்கின்றனரா... அவர்களை நான் மன்னிக்கிறேன்; என்னிடம் ஆரோக்கியம் கேட்பவர்கள் இருக்கின்றனரா... ஆரோக்கியம் தருகிறேன் என இறைவன் கேட்பதாக இறைத் துாதர் கூறினார். 'நான் அமா என்னும் இருளில் இருந்தேன். நான் அறியப்பட விரும்பினேன்.

படைப்பினங்களை படைத்தேன்...' என்று கூறுகிறான் இறைவன். இறைவன் துவக்கத்தில், இருந்ததும், அடியார்களுக்கு நிறைய நன்மைகளை வழங்குவதும் இந்த இருள் நிறைந்த இரவில் தான். இறைவனோடு ஒன்றாக கலக்க, அடியார்களுக்கு இரவை போன்ற வசதி வேறு எதிலும் இல்லை. மனிதர்களுக்கு பாக்கியம் நிறைந்த பல இரவுகளை அளித்திருக்கிறான் இறைவன். பராஅத் இரவு, லைலத்துல் கத்ரு மற்றும் இரவு பெருநாள் இரவு போன்ற இரவுகளை நமக்கு அளித்துள்ளான். குறிப்பாக, லைலத்துல் கத்ரு. இது, 1,000 மாதங்களை விட சிறந்தது. திருக்குர்ஆன் இறங்கிய இரவு, வானவர்கள், அதிகாலை வரை அடியார்களுக்கு சோபனம் சொல்லும் இரவு. இரவில் தான் மனித நடமாட்டம் இருக்காது. உலகின் இயக்கம் சற்று குறைந்து போயிருக்கும். அசாத்திய அமைதி நிலவும். இறைவனோடு ஒன்ற வசதி ஏற்படுத்தும். இத்தகைய இரவில் பரவியிருக்கும் இருள், மனிதனுக்கு வரம் தானே!இஸ்லாம் பிறந்தது முதல் இறக்கும் வரை, எழுந்தது முதல் துாங்கப் போகும் வரை எல்லா செயல்களையும் வரையறுத்துள்ளது. அதில் முழுக்க முழுக்க மனித வாழ்க்கைக்கான ஊக்குவிப்புகள் மட்டுமே உண்டு. மட்டுப்படுத்தல், மட்டம் தட்டுதல் இருக்காது.

பிறந்தவுடனேயே முடிவு தேதி இல்லாமலேயே, 'சஸ்பென்ஸ்' வைத்து ஒவ்வொரு வினாடியும் மரணத்தை எதிர்நோக்க, மனிதனை தயார்படுத்தியுள்ளது இஸ்லாம்.எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும், 'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்' - அருளாலும், அன்பாலும் அளவற்று நிற்கும் அல்லாஹ்வின் பெயரால் என்று சொல்லச் சொன்னதன் மூலம், எல்லா காரியங்களையும் இறைவனின் அனுமதியுடன் ஆரம்பிப்பதன் மூலம், அக்காரியம் முழுமையடைய விரும்பியது. எந்தக் காரியத்தை நாளை அல்லது பிறகு செய்வதாக இருந்தால், 'இன்ஷா அல்லாஹ்' (அல்லாஹ் நாடினால்) என்று சொன்னதன் மூலம், 'இதை நிறைவேற்ற தகுதியான இறைவனிடம் ஒப்படைக்கிறேன்' என்று சொல்லச் சொல்லி, அவனுக்கு அக்காரியத்தை முடிக்கும் வலிமை தந்தது.

எண்பதுகளில் வந்த குமுதம் இதழில், 'ஜெயகாந்தன் டைரி' என்ற பெயரில் ஒரு கட்டுரை வந்தது. அதில், 'எங்கள் பாட்டி இரவில் தினமும் கதை சொல்வாள். அக்கதையின் கிளைமாக்ஸை மறுநாள் சொல்வாள். ஒரு நாள் அதேமாதிரி, 'நாளை கதையின் கடைசியை சொல்கிறேன்...' என்றவள், மறுநாள் எழவே இல்லை. பின்னாளில் என் இஸ்லாமிய நண்பர்கள் பேச்சை முடிக்கும் போதெல்லாம், 'இன்ஷா அல்லாஹ் நாளை சந்திப்போம்' என்பர். இதற்கு விளக்கம் கேட்ட பின் நான் நினைத்தேன் எங்கள் கிழவி, 'இன்ஷா அல்லாஹ்' சொல்லியிருந்தால், கதை சொல்லும் தெம்பு இருக்கும் வரை இருந்திருப்பாளோ என்று எண்ணுகிறேன்...' என்று எழுதியிருந்தார்.நமக்குக் கிடைத்த பலன்களுக்காக முடிந்த செயல்களுக்காக, 'மாஷா அல்லாஹ்' - அல்லாஹ் எனக்கென்று எதை முடிவு செய்தானோ அது கிடைத்தது என்று சொல்லச் சொன்னது. உனக்குக் கிடைக்க வேண்டியதை சுலபமாகவோ அல்லது போராடியோ நீ பெறலாம். உனக்கு கிடைக்க முடியாதவற்றை நீ எவ்வளவு புரண்டாலும் பெற முடியாது என்பதையே, மாஷா அல்லாஹ் என்ற வார்த்தையை இஸ்லாம் சொல்லச் சொல்லி அறிவுறுத்தியது.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைக் கண்டால், 'அஸ்ஸலாமு அலைக்கும்' - நீ அமைதியாகவும், நிம்மதியாகவும் இருப்பாயாக என்றும். அதைக் கேட்டவர் 'வஅலைக்குமுஸ் ஸலாம்' அது போன்றே நீயும் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருப்பாயாக என்றும் சொல்வதை கட்டாயமாக்கியது இஸ்லாம்.காரணம், சாந்தியும் சமாதானமும் நிலையில்லாதவை. மனித மனத்தைப் போல் புரண்டு கொண்டே இருப்பவை. அதனால் தான், ஒரு நாளில் எத்தனை முறை ஒரே மனிதனைக் கண்டாலும், ஒரே இடத்தில் பலமுறை திரும்பித் திரும்பி பார்க்க நேர்ந்தாலும் ஸலாம் சொல்வதை கட்டாயமாக்கியதன் மூலம், மனதின் வெறுப்புகளை குரோதங்களை கூடியவரை அணை போட முயன்றது, இஸ்லாம்.எனக்கு ஒரு நினைவு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தான் அதிபர் முஷாரப் நல்லெண்ண அடிப்படையிலும், சில ஒற்றுமை ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் இந்தியா வந்தார். அப்போது, 'தினமலர்' பத்திரிகையின் பல பக்கங்களில் அது சம்பந்தமான மகிழ்ச்சியான செய்திகள் முன்னெடுத்து சொல்லப்பட்டிருந்தன. அவை அனைத்திற்கும் தலைப்பாக, 'அஸ்ஸலாமு அலைக்கும் முஷாரப்ஜீ' என்று தலைப்பிடப்பட்டிருந்தது இன்றும் நினைவில் இருக்கிறது. 'முஷராப் அவர்களே இந்தியா சம்பந்தமாக எந்த வேறுபாடான எண்ணங்களுமின்றி முழுக்க முழுக்க சமாதான அடிப்படையிலேயே வாருங்கள்' என்று அழைத்திருந்த பண்பு அற்புதமானது.தும்மல் போட்டால் 'அல்ஹம்து லில்லாஹ்' - எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றும், அதைக் கேட்டவர், 'யர்ஹமுகல்லாஹ்' இறைவன் உன் மீது தன் அருளைப் பொழிவானாக என்றும் சொல்லச் சொன்னது.காரணம், தும்மல் அசாத்திய வேகத்தில் மூக்கிலிருந்து வெளிப்படுவதால் மூச்சே தடைபடும் அபாயம் உள்ளது. 'அதிலிருந்து இறைவன் அவனை மீட்டு உயிருடன் இருக்கச் சொல்வதால் அவனைப் புகழ்வதையும், அதைக் கேட்ட அடுத்த முஸ்லிம், தன் சகோதரன் உயிருடன் இருப்பதில் சதோஷம் கொள்வதால் உன் மீது இறையருள் பொழியட்டும்' என்று பிரார்த்திக்க சொல்லித் தரப்பட்டிருக்கிறது.மொத்தத்தில் மனிதனின் சின்னச் சின்ன நிகழ்வுகளையும் இறைவனுடன் தொடர்பு படுத்தியும், சக மனிதனின் நலம் காக்கும் அரணாக இருக்க வேண்டியும் போதிக்கும் இஸ்லாமைப் புரிந்து கொள்வோம். ஈத் முபாரக்!திருத்தப்பட்டது - நவநீதன்25.05.2020 தினமலர் நாளிதழ்- ரம்ஜான் சிறப்பு மலருக்காக 29.04.2020 எழுதப்பட்டது. ரமலான் பிறைக் காலமே...- அத்தாவுல்லா - * எங்கள் இராக்காலங்களையும்நிலாக்காலங்களாக்கும்ரமலான் பிறைக்காலமே...* பசித்திருப்˜போம்விழித்திருப்˜போம்இப்˜போது கூடுதலாகவீட்டில் தனித்திருக்கி˜றோம்!* இறை நினை˜வோடு இருக்கி˜றோம்நபி வழியில் நாட்டுச்சட்டம்˜பேணுகி˜றோம்!* பள்ளிவாசல்கள் எல்லாம்பூட்டப்பட்டிருக்கின்றனஉள்ள வாசல்கள் எல்லாம்திறந்திருக்கின்றன!*

இல்லங்கள் எல்லாம்- - இறைஇல்லங்கள் ˜போலஒளிர்கின்றன...வஞ்சியர் வைத்தார் என்று˜நோன்புக்கஞ்சிஎங்களை வஞ்சிக்கவில்லை!* ஏழையர் வரி ஜக்காத் கொடுப்பதை எந்த சமூக விலகலும்தடுக்கவில்லை!* கைகொடுத்தல்கள் இல்லைகட்டிப்பிடித்தல்கள் இல்லைகனிவான முத்தங்கள் இல்லைஎல்லா மருத்துவமனைகளும்தப்லீக் தளங்களாகி விட்டன!* பிளாஸ்மாக்களைக் கொடுத்துஉலகை˜யே வாழ வைக்கி˜றோம்உயிர் காக்கும் ஜக்காத்!* ரமலானே ... நீகொ˜ரோனாவைக் கரித்து விடுதீயவரின் சூதாட்டங்களை எரித்து விடுபிரிந்து சென்ற இதயங்களைஇணைத்து விடு...வாழ்க மானுடம்! -அத்தாவுல்லா ******பிரகாசிக்கிறது, சுவனத்தின் வாசல்கள்!- நுார்தீன்* பக்கீர்சாக்கள் இல்லாத ஸஹர் என்பதுநிசப்தமான இரவை˜பேரிரைச்சலாக்குகிறதுமவுனமாய் š மனசுக்குள் அறையும்தபஸின் சப்தம்எங்˜கோ இறைஞ்சும் பசியின்கதறலாயிருக்கிறது!˜* பேரீத்தங் காšய்களைபழுக்க வைக்கும் உஷ்ணத்தில்முஸாபீர்களின் கால்களைகிருமிகளின் சங்கிலிகளால்இறுக்கிவிட்டு˜பேரிடராய்š உலுக்கும்இப்லீசானுக்காகஉலக˜மே திக்ர் செய்šது பிரார்த்திக்கும்அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறதுஇப் புனித ரமலான்!˜* நோன்பு திறப்பதற்குகுவளை தண்ணீரும்,ஒரு ˜பேரீச்சையும்,சிறிது கஞ்சியும்˜போதும்...ஜகாத் எளியவர்களின் வயிறுகளை நிரப்பட்டும்தராவீஹ் தொழுகையின்துவாக்களின் கண்ணீரில்பிரகாசிக்கிறது சுவனத்தின்வாசல்கள்!* 'அம்மா, அத்தா எப்ப வருவாக...அம்மா, அத்தா எப்ப வருவாக...குழந்தைகளின் நச்சரிப்புகளையும்மீறி ˜ரேகாலியின் பக்கங்களில்ஒளிர்ந்து கொண்டிருக்கும்குர்ஆன் வசனங்கள் தான்வாழ்வின் நம்பிக்கை!* விரல்களில் உருளும்தஸ்பீக்மணிகளாகமுப்பது நாட்கள் உருண்˜டோடிவிடும்புத்தாடைகள் இல்லைஇருக்கும் ஆடைகள் ˜போதும்எப்˜போதும் அல்லாஹ்விடம்இறைஞ்சும் துவாக்களில்விமான˜ போக்குவரத்து சீராகிவளைகுடாவிலிருந்து கணவன்நலமுடன் திரும்பட்டும்கொரோனாவிலிருந்து பூமிமீளட்டும்அன்று தான் எங்களுக்குப் பெருநாள். இன்ஷா அல்லாஹ்!* காšஞ்சிப்போன அவளின் சுஜூதுதழும்புகளில்நெற்றிக்கண்ணாš இறைவனின்கருணை!*******ரம்ஜான் ஹைக்கூ கவிதைகள்பட்டியூர் செந்தில்குமார்* ரமலான் முதல் நாள்பேரீச்சை மரக்கீற்றுவருட வருடநகரும் பிறை நிலா!* 'லாக் டவுன்' தனிமைவீட்டிலிருந்தே தொழுகிறேன்எனக்குள் மசூதியின் பேரமைதி* முப்பது நாள் நோன்புமீண்டும் பிறைநிலாபார்த்துக்கொண்டிருக்கிறேன்கொரோனா ஓட்டம்!* நோன்பு துறக்கும் பொழுதுஇப்தாரில் மூன்றுபேரீச்சம் பழத்தோடுஆஹா ஒரு கோப்பை இறைதேடல்!* பசித்திரு விழித்திரு தொழுதிருநகரும் மேகங்களுக்கிடையேஆன்மிக பச்சைநிலா!* துாரத்து மசூதியிலிருந்துகடந்து வரும் பாங்கின்அழைப்பொலி...வீட்டில் தொழு!* ராமனும் சகாயமும்மதங்களை மறந்து பருகினர்நோன்பு கஞ்சி!* ஒட்டகமே பொறுத்திருஇதோ புற்கட்டுகளோடு வருகிறேன்உனக்கு நோன்பு தான் இல்லையே!=====================================================================பிழை திருத்தப்பட்டது25.05.2020 தினமலர் நாளிதழ்- ரம்ஜான் சிறப்பு மலருக்காக 28.04.2020 எழுதப்பட்டது. புகழப்பட்டவர்... - அத்தாவுல்லா -அன்று ரோமப் பேரரசின் சக்ரவர்த்தியாக சீசர் ஆண்டபோது, அவருக்கு ஒரு மடல் வந்தது. அதில், இஸ்லாத்தின் சிறப்பை விளக்கி இணைந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அனுப்பியவர் நபிகள் பெருமான்.மடலின் உறுதியைத் தெளிவுற தெரிந்து கொள்ள விரும்பிய மாமன்னர், அரபு தேசத்துப் பிரஜைகள் எவரையாவது தம் முன் கொண்டு வந்து நிறுத்தப் பணித்தார். அதன்படி, வீரர்கள் கையில் அகப்பட்டவர், மக்கத்தின் அபூஸூஃபியான்; நபிகளாரின் துாரத்து உறவுமுறையாளர். ஆனால், அவர் அப்போது இஸ்லாமை தழுவவில்லை. இணை வைப்புக் கொள்கையைக் கைக்கொண்டவர். மாமன்னரின் ஐயப்பாட்டு கேள்விக் கணைகளுக்கு எல்லாம் அவர் தாம் பதில் தரும் விளக்கமாக இருந்தார். தமக்கு கிடைத்த வாய்ப்பைத் தவற விடக்கூடாது. உண்மைக்கு மாற்றமாக நபிகளுக்கு எதிராக மொழிய வேண்டும் என்று தான் முதலில் அவர் உறுதி கொண்டிருந்தார். ஆனால், உண்மையை தவிர பொய் பேசினால் தலை தப்பாது எனும் மன்னர் உத்தரவால் அவர் உண்மைகளை மட்டுமே மொழிந்தார்.அவரது பதில்கள் வெறும் பதில்கள் அல்ல. தம்மையறியாமலே மாணிக்க கற்களால் ஆன கிரீடத்தை நபிகளுக்கு சூட்டிக் கொண்டிருந்தார். எதிரிகள் வாயாலேயே, புகழப்பட்டவரானார், நபிகள்.ஏற்றிப் போற்றத்தக்க அத்தனை ஒழுக்கங்களில் இருந்தும் வழுவாதவரான, நபிகளைப் பற்றி ஸூஃபியான் போட்டு வைத்த ஆசனம் மன்னர் தலைமையை விட விஞ்சி நின்றது.அது கேட்ட மன்னர் சொன்னார்-...'இறுதி காலத்தில் ஒரு தீர்க்கதரிசி வருவார் என்பதறிவேன். ஆனால், அவர் அரபிக் குலத்தில் என்று நினையேன். நான் நினைப்பது உண்மை என்றால் அனைத்துத் தடைகளையும் கடந்து அவர் மார்க்கம் வெல்லும். அரசாட்சியின் மேல் எனக்கு ஆவல் இல்லையென்றால், நான் அவரைப் பின் தொடர்வேன். அவர் பாதம் கழுவுவேன்...' என்று சொன்னார், சீசர். ஆய்வாளர் அல்ல ஞானியும் அல்ல. ஆனால், அவர் சொன்னது உண்மை. ஏனெனில், ஒரு மன்னருக்குரிய தொலைதுாரப் பார்வை அவருக்கு இருந்தது. அத்தோடு பழைய வேதங்களின் சில கருத்துக்களிலும் அவருக்கு உடன்பாடு இருந்தது.இன்று, உலகின் அறுவரில் ஒருவர் முஸ்லிம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இஸ்லாம் உலகை நிறைத்திருக்கிறது. இன்னும் நிறைந்துக் கொண்டு வருகிறது. அதற்குக் காரணம் இஸ்லாத்தின் போதகர் முஹம்மது நபிகள்!பிறந்த பெண் குழந்தைகளை பாலை மணலில் புதைத்து விடுகிற வன்கொடுமை வழக்காகி இருந்த ஒரு தேசத்தில், கொலையும், களவும், மதுவும், மாதுவும் வாழ்வின் இலக்கணங்களாக எழுதப்பட்ட ஒரு பெரு நிலத்தில், குறியும் கோளும் சூதாட்டமும் சோதிடமும் நிறைந்து கிடந்த காட்டரபிகளிடம் தம்மை இறை துாதர் என வாதிட்டு வெற்றி பெறுவது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியமல்ல... ஆனால், அதை சாதித்து காட்டினார் நபிகள் நாயகம். அடக்கு முறையால் அல்ல... உண்மையால் அன்பால் தன் நன்னடத்தையால் நாகரிகப் பண்பால்.நாற்பது வயதில் அவருக்கு நபிப் பட்டம் அருளப் பெற்ற போது, அதை ஏற்றுக் கொண்டவர்கள் வெகு சிலரே. அவரது 63வது வயதில் அவரது மரணத்தருவாயில் இஸ்லாம் இந்த உலகத்தையே அடைத்து, நிறைந்த ஆலமரமாய் வளர்ந்து நின்றது. விடுபட்ட சில தேசங்களும் அவரின் தோழர்கள் காலத்தில் முழுமையாக இஸ்லாத்தின் பிடிக்குள் வந்தன.ஆயிரத்தி நானுாறு வருடங்களுக்கு முன் அரபகத்தில், அன்னை ஆமீனாவுக்கும், தந்தை அப்துல்லாவுக்கும் அருந்தவப் புதல்வராய் முஹம்மது எனும் மாமனிதர் பிறந்தார்.வாய்மையே பேசிய, யாருக்கும் தீங்கு செய்யாத பாவக்கறை படாத நபிகள் உண்மையாளர் (அல்-அமீன்) என்றும், நம்பிக்கையாளர் (அஸ்-ஸாதிக்) என்றும் அழைக்கப்பட்டார்.ஆடு மேய்த்து தன் வாழ்க்கையை துவங்கியவர்தாம், நபிகள் நாயகம். கடைத் தெருவுக்கு செல்வதாக இருந்தால் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போய் நின்று இதோ முஹம்மது கடைக்கு போகிறேன். உங்களுக்கு தேவையானதை சொன்னால் வாங்கி வருகிறேன்...' என்பார். ஊரின் செல்லப்பிள்ளை அவர். திருமணம் முடிந்து, அன்னை கதீஜா கணவருக்கு ஓர் அடிமையை பரிசாய் வழங்கினார். நபிகளார் அடிமையை பெற்ற கணமே விடுதலை செய்து அவரின் பெற்றோருடன் அனுப்ப விழைந்தார். ஆனால், அந்த அடிமையோ முஹம்மதுவுடன் தான் இருப்பேன் என அடம் பிடித்தார். அவர் தான் ஸைத். பின்னாளில் நபிகளின் வளர்ப்பு மகன் ஆனார்.முஹம்மதின் 40வது வயதில் நபிப்பட்டம் அருளப்பட்டது. மக்காவில், 13 ஆண்டுகள் இறை செய்தியை பரப்பினார், நபிகள் நாயகம். ஏற்றுக் கொண்டவர் சிலர், ஏற்றுக் கொள்ளாமல் முரண்டு பிடித்தவர் பலர். 13ஆண்டுகளுக்கு பிறகு இறைகட்டளையை ஏற்று மதீனம் புறப்பட்டார், நபிகள் நாயகம். அந்த பயணத்தை தான், 'ஹிஜ்ரத்' என்று இஸ்லாம் புத்தாண்டாக்கி மகிழ்கிறது. மதினாவில் பத்து ஆண்டுகள் என, மொத்தம் 23 ஆண்டுகளில் அவர் எடுத்து சொன்னது தான், இஸ்லாம்.தனக்கேற்பட்ட எல்லா துயரங்களையும் தனிமனிதராய் மன்னித்துவிட தயாராய் இருந்தார், நபிகள் நாயகம். ஆனால், மக்க - மதீன மக்களின் மாண்புக்குரிய மன்னராக அவரை மக்கள் தேர்ந்தெடுத்த பிறகு கலகக்காரர்களுக்கு பாடம் கற்றுத்தர வேண்டிய பொறுப்பு அவருக்கு முளைத்தது. போரில் தோல்வியுற்று நிற்கும் எதிரிகளை விடுதலை செய்ய, நபிகள் நாயகம் ஒரு புது வழியை கையாண்டார். கல்வி கற்றவர்கள் கல்லாத ஒவ்வொரு பத்து பேருக்கும் கல்வி சொல்லி கொடுத்து விடுதலை பெறும் வழி. சிறைக்கோட்டம் கல்விக் கோட்டமாக மாறியது.சொல்லுக்கும், செயலுக்கும் வித்தியாசமில்லாத வாழ்க்கை வாழ்ந்தார், நபிகள் நாயகம். ஒருமுறை, நபிகள் நாயகத்தின் இளம் மனைவி அன்னை ஆயிஷா அவர்களிடம் கேட்கப்பட்டது... 'நபிகளாரின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று அவர் பதில் தந்தார்.நபிகளாரின் வாழ்க்கை குர்ஆனாக இருந்தது!”அதைபோல நபிகளாரிடம், 10 ஆண்டுகள் பணி செய்த அனஸ் எனும் தோழர் இப்படி சொன்னார்... 'இத்தனை ஆண்டு கால நபிகளுடனான என் வாழ்வில் ஒரு முறை கூட 'சீ' என்ற சொல்லை நான் அவர்கள் வாயிலிருந்து கேட்டதில்லை...'இஸ்லாம், வாளால் பரப்பப்பட்டது என்பது ஒரு அபவாதம். எல்லாருக்குமான சமாதானமிக்க ஏற்றம்மிக்க ஓரிறை கோட்பாட்டை, நபிகளார் மனித சமுதாயத்தின் முன் வைத்தார். அதில் மட்டும் அவர் சமரசம் செய்து கொள்ளவே இல்லை.அமெரிக்காவில் கறுப்பின மக்களின் அடிமை விலங்கை அறுத்தெறிந்த, ஆபிரகாம் லிங்கனுக்கு முன்னோடிதான், நபிகள் நாயகம். 'உழைப்பவருக்கே உலகம் சொந்தமாக வேண்டும்' என்றான் கார்ல் மார்க்ஸ். 'உழைப்பாளியின் வியர்வை காயும் முன்னே கூலியை கொடுத்து விடுங்கள்' எனக் கூறிய கார்ல் மார்க்ஸை முந்திக் கொண்டவர், நபிகள் நாயகம். 'தோழர்களே...' என்றழைத்து ஒரு புதிய நடைமுறையை கொண்டு வந்தனர் கம்யூனிஸ்ட்கள். ஆனால், அதற்கு முன்னரே தம்முடைய நண்பர்கள் அனைவரையும், தோழர்கள் என அழைத்து நட்புக்கு புதிய விளக்கம் தந்தவர், நபிகள் நாயகம். ஸஹாபாக்கள் என்பதற்கு, தோழர்கள் என்பதே பொருள். சமத்துவத்தையும், சமச்சீரமையையும் 1400 ஆண்டுகளுக்கு முன் விதைத்து சென்றவர், நபிகள்.ரமலானில் பெரும்பாலும் வழங்கப் பெறும் கட்டாயமாக விதிக்கப் பெற்ற 2.5 சதவீத ஏழை வரி உலகின் கண்ணோட்டத்தில் மிகமிக உயர்வானது.இன்று, அரபுநாடுகளில் தீக்குளித்தல் இல்லை, மாமியார் - மருமகள் சண்டை இல்லை, ஸ்டவ் வெடிப்பு இல்லை. உண்ணாவிரதங்கள் இல்லை. ஊதாரிகளாக ஊர் சுற்றும் வழக்கம் இல்லை, திருட்டு - விபசார கொலைகள் இல்லை, விவாகரத்து அதிகம் இல்லை. ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் அரசு சொத்துகளை சேதபடுத்துதல் இல்லை, 50வயதில் 60வது முறையாக ஒருவன் சிறைக்கு சென்று திரும்பும் வழக்கமில்லை. 70 வயது காமுகன், ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்வது இல்லை. நடைமுறை வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது.'உங்களில் உங்கள் பெண்களுக்கு நல்லவரே இறைவனிடமும் நல்லவர். நான், என் பெண்களிடம் நல்லவனாக இருக்கிறேன்' என்றார், நபிகளார்.மூன்றில் ஒரு பங்கு உணவு. ஒரு பங்கு நீர். ஒரு பங்கு வெற்றிடம் என்ற நபிகளின் உணவு உண்ணும் முறை அற்புதமானது.ஏழைகளின் வாழ்வோடு விளையாடும் வட்டியை ஒழித்து உண்மையான பொருளியலுக்கு அடிகோலினார், நபிகள் நாயகம். 'ஆற்றின் கரையில் இருந்து நீ தொழுகைக்கு சுத்தம் செய்தாலும் நீ ஒரு கையளவு நீருக்கு அதிகம் செலவு செய்யாதே' என நீர் மேலாண்மைக்கு விடையளித்தார், நபிகள் நாயகம்.நபிகளின் போதனைகள் அனைத்தும் வாழ்க்கைக்கும், நாட்டுக்கும் நலம் பயப்பவை. நபிகள் சுருக்கமாக பேசுவார். ஆனால், விளக்கமான கருத்துக்கள் இருக்கும். நடுத்தர உயரம், உலகில் எவருக்கும் இல்லாத பேரழகு, நடை உடை பாவனைகளில் நடுத்தரம், எப்போதும் சிரித்த முகம். ஏழைகளிடம் இரக்கம், பெரியவர்களிடம் மரியாதையும், கண்ணியமும், நண்பர்களிடம் அதிக அன்பும் பாசமும், எவருக்கும் முந்தி ஸலாம் சொல்லும் பண்பு, எங்கே இடம் கிடைத்தாலும் அமர்ந்து கொள்ளும் இணக்கம், எவரினிலும் தன்னை தனித்து காட்டி கொள்ளாத நயம், பேச்சிலே இனிமை, அனைத்திலும் முதலிடம்... அதனால் தான், நபிகள் நாயகத்துக்கு உலக நாயகர்களின் வரிசையில் முதலிடம் கொடுத்தார், மைக்கேல் ஹார்ட்.இறைவனும், நபிகள் நாயகத்தை முன்னிலை படுத்துகிறான், முன்மாதிரி என்கிறான். புகழுக்குரியவராக சிறப்பிக்கிறான், அவர் பெயரின் பொருளே புகழப்பட்டவர் என்பதே. அருள்மறை இப்படி கூறுகிறது. “உமது புகழை நாமே உயர்த்தினோம்!” இறைவன் உயர்த்திய புகழை எவர் வந்து என்ன செய்ய முடியும்!அது, உலகம் உள்ளவரை மட்டுமல்ல மறுமையிலும் உயர்த்தப்பட்ட புகழ்!=======================================================================இஸ்லாமிய நொடி கதைகள்அபூ பாஸிம்கதை -1: நீங்க நோன்பாகாய்கறிக் கூடையை, 'தொப்' என்று போட்டார் சேமகண்ணு (முழுப் பெயர் செய்யது முகமது கண்ணு)''என்னங்க எரிச்சலோட வர்ற மாதிரி இருக்கு?'' கேட்டாள் மனைவி. ''வெளியில இறங்க முடியல. யார பார்த்தாலும், 'சேமகண்ணு நோன்பா... சேமகண்ணு நோன்பா'ன்னு கேட்டு தொலைச்சு எடுக்கிறாங்க!''''இந்த உலகமே நோன்பு வைக்க மறந்தாலும், இந்த சேமகண்ணு நோன்பு வைக்க மறக்க மாட்டான்னு சொல்ல வேண்டியது தானே?''''அதெப்படி சொல்றது? அப்படி சொன்னா ரகசியம் உடைஞ்சு போயிராது?''''என்ன பொல்லாத ரகசியம்?''''நோன்பு என்பது இறைவனுக்கும், நமக்கும் இடையே உள்ள ரகசியமான அமல். அதை வெளிக்காட்டாம இருக்கிறதுக்கு நிறைய நன்மை இருக்கு. நம்ம நபி தோழர்கள் நோன்பாளின்னு தெரியாத வண்ணம் தலைக்கு எண்ணெšய் தேய்ச்சு உற்சாகமாக இருந்திருக்காங்க தெரியுமா உனக்கு?''''அப்ப யார்கிட்டயும் நீங்க நோன்பான்னு கேட்கக் கூடாதா?''''ஆமா!''''ஹைய்யோ... உங்கக்காகிட்ட நோன்பான்னு கேட்டுட்டேனே...''''நீ எதுக்கு கேட்ட... அவளுக்கும் சேத்து சமைக்கணுமான்னு தெரிஞ்சுக்க தானே கேட்ட... இனிம கேக்காத விடு!''''இனி அநாவசியமா யார்கிட்டயும் நீங்க நோன்பான்னு கேக்க மாட்டேன். கேக்கிறவங்களை என்ன பண்றது?''''நீ திருந்துன மாதிரி அவங்களும் ஒரு நாள் திருந்துவாங்க!'' என்றார் சேமகண்ணு சாந்தமா. கதை -- 2: நோன்பு திறக்க உதவிதொலைக்காட்சியில் கொரோனா பரவுவதை தடுக்க அறிவுரை கூறிக் கொண்டிருந்த மருத்துவரை, இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் சேமகண்ணு. கைபேசி சிணுங்கியது.எடுத்து இடது காதில் வைத்தார், சேமகண்ணு... ''ஹலோ நான் சேமகண்ணு பேசுறேன்!''''நான் இமாம் பேசுறேன் பா!'' அழகிய முகமன் பரிமாற்றம்.''சாயங்காலம் அஸருக்கு பிறகு வீட்டுக்கு வாங்க!''''எதுக்கு?'''''நோன்பு திறக்க நோன்பு கஞ்சி, பழங்கள் வாங்கி வச்சிருக்கேன். வந்து அதில் பாதியை எடுத்துக்கிட்டு போங்க பா!''''எதுக்கு சிரமம், வருமானம் இல்லாத இந்த ஊரடங்கு நேரத்துல...''''நாங்க விலை கொடுத்து வாங்கலை. பக்கத்து வீட்டு ஹாஜியார் கொடுத்து விட்டார். எங்க தேவைக்கு அதிகமா இருக்கு. உங்க வீட்டுக்கு ஆகுமேன்னு வர சொன்னேன்!''''இல்ல இமாம் இருக்கட்டும்!''''நீங்க வேண்டாம்ன்னு சொல்றதுக்கு காரணம் இருக்கிற மாதிரி தெரியுதே!''''ஆமா, நோன்பு திறக்கிறதுக்கு உங்க பதார்த்தங்களை வாங்கினா, எங்க நோன்புடைய நன்மைகள் உங்களுக்கு வந்திடுமே?''''அப்டின்னு யாரு சொன்னா?''''நீங்க தானே, பயான்ல சொன்னீங்க, யாராவது நோன்பு திறக்க உதவி செஞ்சா அந்த நோன்போட கூலி உதவி செஞ்வருக்கு கிடைக்கும்ன்னு!''''அதுக்கு அர்த்தம் அப்படி இல்ல. நோன்பு திறக்க உதவி செஞ்சா, உதவி செஞ்சவருக்கு கூலி கிடைக்கும். ஆனா, உதவி பெற்றவரின் கூலியை எடுத்து தருவதில்லை. உதவினவருக்கு தனியா அல்லாஹ் குடுப்பான். அல்லாஹ் ரொம்ப பெரிய கொடையாளன்!''''அப்படியா அப்ப வாங்கிக்கிறேன்... கூட நாலு சமோசா குடுங்க இமாம்...''---------கதை எண் - - 3: ஜனாஸா தொழுகை!மஹல்லா மக்கள் சந்தாக்கை துாக்கி கொண்டு பள்ளிக்குள் பிரவேசித்தனர்.பள்ளி முற்றத்தில் ஜனாஸாவை மெதுவாக இறக்கி வைத்தனர்.''இமாம் ஷாப்! வாங்க தொழ வைங்க!''''அதெப்படி தொழ வைக்க முடியும்? அஸருக்கு பிறகுன்னு தானே அறிவிச்சீங்க... இப்ப மணி நாலு தான ஆகுது. ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னாடியே தொழ வச்சிருவீங்களா?'' கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.''நாம தயாராத்தான் இருக்கம் தொழுதிர வேண்டியது தானே!''''அஸருக்கு பிறகுன்னு நினைச்சு, வீட்டுல இருக்கிறவங்க கலந்துக்க வேணாமா?''கூட்டம் இரண்டுபட்டது. நிர்வாகம் கையை பிசைந்தது. சேமகண்ணு முன் வந்தார்.''இது மார்க்க பிரச்னை. இமாம் தான் தீர்வு சொல்லணும். நாம சண்டை போட்டு ஆகப் போவதில்லை.''''அதெப்படி இமாம் தீர்வு சொல்றது; நிர்வாகம் எதுக்கு இருக்கு?''புதிதாக வந்த நிர்வாகி அதட்டினார்.சேமகண்ணு கண்டுகொள்ளாமல் இமாமை அழைத்து வந்து கூட்டத்தின் மத்தியில் நிறுத்தினார்.இமாம், ''இப்ப என்ன செய்றது? மனிதன் இறந்து போனால் சீக்கிரமா அடக்கணும்ன்னு நம்ம நபிகள் நாயகம் சொல்லிருக்காங்க. அதோட ஜனாஸா தொழுகை எல்லாருக்கும், 'பர்ளு' அல்ல 'பர்ளுகிபாயா' தான். ஒரு சிலர் தொழுதாலே எல்லாருக்குமான கடமை நீங்கிவிடும். ஜனாஸா யாருக்காகவும் காத்திருக்கக் கூடாது. அதனால இப்ப தொழுதிரலாம்.''தொழுகைக்காக மக்கள் வரிசையில் நிற்க துவங்கினர்.''நம்மகிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கற இமாம் எப்படி தன்னிச்சையா முடிவெடுக்கலாம்?'' மனதிற்குள் கறுவினார் புதிய நிர்வாகி.--------கதை - எண் - 4: பெருநாள் நோன்புசேமகண்ணு செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அவரது மனைவி சமையலறையில் இருந்து குரல் கொடுத்தாள், ''ஏங்க! நோன்பு வைக்கணும். ஸஹருக்கு ஏதாவது வாங்கிட்டு வாங்க!''''என்ன வாங்கலாம்?''''வஞ்சிரம் மீனும், லெக்பீஸ் சிக்கனும் வாங்கிட்டு வாங்க!''''அரஃபா நோன்பு வைக்க எதுக்கு ரெண்டு அயிட்டம்?''''முதல் நாள் அரஃபாவுக்கு மீன். ரெண்டாவது நாள் பெருநாள் ஸஹருக்கு சிக்கன்!''''பெருநாளைக்கு நோன்பா?''''ஏன் உங்களுக்கு தெரியாதா?''''நீயே சொல்லு!''''ஹஜ் பெருநாள் காலைல ஸஹர் செஞ்சு நோன்பு வைக்கணும். பிறகு தொழுதுட்டு குர்பானி கொடுத்துட்டு அந்த கறியை கொண்டு நோன்பு திறக்கணும்!''''ஆத்தாடி இது எந்த ஊர் சட்டம்?''''எல்லா ஊர் சட்டமும் தான். உங்கள, உங்கம்மா ஒழுங்கா வளக்கல. அதுதான் தெரியல.''''ஏய் நிறுத்து, இதுல ஏன் என் அம்மாவை இழுக்கிற?''''பின்ன, ஹஜ்ஜுப் பெருநாள் நோன்பு தெரியலைன்னா?'''கொஞ்சம் இரு... ஹஜ்ஜுப் பெருநாள் நோன்பு உண்டா, இல்லையான்னு உங்க ஆலிமாகிட்டய கேட்டிருவம்.''கைபேசியில் பத்து இலக்க எண்ணை அமுத்தி நீட்டினார். ''ஹஜ்ஜுப் பெருநாளைக்கு பாதி நோன்பு வைக்கணும் தானே?''''ஹஜ்ஜுப் பெருநாளைக்கு பாதி நோன்பா? வருஷத்துல ஒரு குறிப்பிட்ட ஐந்து நாட்கள் நோன்பு வைப்பது ஹராம். நோன்பு பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானி கொடுக்கும் அடுத்த மூன்று நாளும் சேர்த்து அஞ்சு நாள் நோன்பு வைக்கக் கூடாது!''''தேங்க்யூ மேடம்!''''எப்படி எங்கம்மா என்னை நல்லா வளத்தாங்களா?'' கிண்டலா வினவினார், சேமகண்ணு.''ஆமா வந்தாங்க வளத்தாங்க... போய் மீன் மட்டும் வாங்கிட்டு வாங்க!''சேமகண்ணு வெற்றி சிரிப்போடு மீன் அங்காடி நோக்கி நடந்தார்.------கதை எண்- - 5: தலைப்பாகைநகரின் மையப் பகுதியில் இருந்த பள்ளிவாசலில் ஜும்மா தொழுகைக்காக காத்திருந்தார் சேமகண்ணு. ஒடிசலான தேகம் கொண்ட இமாம் முன் வந்தார். பிரசங்கம் செய்தார். மேடையேறி குத்பா ஓதினார். தொழ வைத்தார். இமாம் என்பதற்கான எந்த பிரத்யேக அடையாளமும் அவரிடம் இல்லை. வெள்ளைக் கைலியும், சட்டையும், தலையில் ஒரு வலை தொப்பியும் அணிந்து சாதாரண தொழுகையாளி போலவே இருந்தார்.தொழுகைக்கு பின் இமாம் அறையில் அவரை சந்தித்து பேசினார், சேமகண்ணு.''நான் பக்கப்பட்டி கிராமத்திலிருந்து வரேன், இமாம். எங்க ஊர் இமாம், ஜும்மாவுக்கு வர்றப்ப பெரிய ஜிப்பா, ஏழு முழ தலைப்பான்னு பிள்ளை பிடிக்கிறவன் கணக்கா வருவார். கேட்டா அப்டி வர்றது தான் சுன்னத்து வீரம்ன்னு சொல்வார். ஒரு இமாம் அறிவாலும், உடையாலும் தொழுகையாளிகளிடமிருந்து வித்தியாசப்படணும்ன்னு சொல்வார். கிரீடம் அணியலேன்னா ஒரு ராஜா சாதாரண குடிமகனாகி விடுவாருன்னு நையாண்டி பேசுவார். அவர் கிடக்கட்டும், இமாம். நீங்க சிம்பிளா வந்து தொழுகை நடத்துங்க!'' வஞ்சப் புகழ்ச்சி செய்தார் சேமகண்ணு.''உங்க இமாம் சொன்னது தான் சரி. இனி அத்தர் நறுமணம் பூசிக்கொண்டு மேலங்கி தலைப்பாகையோட தான் தொழுகையை நடத்துவேன். என் கண்ணை திறந்ததற்கு நன்றி பா!''முறுவலித்தார், சேமகண்ணு.-----கதை எண்- - 6: அல்லாஹ்வின் அன்புகொரோனா நோய் பரவலை தடுக்க அரசாங்கம் ஊரடங்கு அறிவித்திருந்தது. மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். மார்க்க அறிஞர்கள் சபை அறிவிப்பை கேட்டு பள்ளி வாசல்களும், மதரஸாக்களும் மூடப்பட்டிருந்தன.ஊரடங்கின் மூன்றாவது நாள் வெள்ளிக்கிழமை காலை யாசின் மவுலானாவுக்கு போன் வந்தது. அழகிய முகமன் பரிமாற்றம்.''நான் அஹமது பாய் பேசுறேன். நல்லா இருக்கீங்களா?''''நல்லா இருக்கேன். நீங்க நல்லாயிருக்கீங்களா?''''எங்க நல்லா இருக்கிறது? அதுதான் பள்ளியை பூட்டிட்டாங்களே... ஜும்மாவுக்கு வரக் கூடாதுன்னு வேற சொல்லிட்டாங்க... எனக்கு மனசே சரியில்ல...''''வருத்தப்படாதீங்க, எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம். நபியுடைய காலத்திலேயே இது மாதிரி சிரமமான நேரங்களில் மக்கள் பள்ளிக்கு வராமல் அவங்கவங்க வீட்லயே தொழுதிருக்காங்க!''''மவுலானா நான் ஜும்மா வீட்லயே தொழலாமா?''''இல்லை லுஹராத்தான் தொழ வேண்டும்!''''ஏன் அப்படி சொல்றீங்க? நான், என் மனைவி, இரண்டு பிள்ளைகள், மருமகள் என, அஞ்சு பேர் இருக்கிறோமே... நாங்க தொழுதால் என்ன?''''ஜும்மாவுக்கு குத்பா ஓதுதல் ஒரு நிபந்தனை!''''ஒரு உயரமான இடத்தில் நின்று ஓதணும் அவ்வளவுதானே... நானே ஓதுறேன்!''''நீங்க ஏன் இவ்வளவு சிரமப்படணும்? உலமாக்கள் அறிவித்தபடி லுஹர் தொழுது கொள்ள வேண்டியது தானே?'''நான் ஜும்மா தொழுதா, தொழுகை கூடுமா கூடாதா... சட்டத்தை மட்டும் சொல்லுங்க!''''கூடும். மார்க்க அறிஞர்கள் வழிகாட்டுதலின்படி நீங்க தொழுவது நல்லது. ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?''''அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கு தான்!''''ஊரடங்கு நேரத்துல, எவ்வித வருமானமும் இல்லாம உங்க வீட்ல வாடகைக்கு இருக்கிற ஏழை எளியவர்கள் தர வேண்டிய இரண்டு மாத வாடகையை ரத்து பண்ணுங்க... ஊரடங்கு நேரத்துல பள்ளிவாசலில் போய் தொழுதே தீருவேன் என்கிற அடத்தை ஒழியுங்க... அல்லாஹ் உங்க மீது இரட்டிப்பு அன்பை பொழிவான்!''அஹமது மவுனித்தார்.-----கதை எண் -- 7: சொந்த வீட்டில் திருட்டுநோன்பு திறந்து மக்ரிபு தொழுது முடிக்கையில் மின்சாரம் நின்று போனது. கோடையின் வெப்பம் அனலாக தகித்தது. ஒரு நாற்காலி எடுத்து தெருவில் போட்டு அமர்ந்தார், சேமகண்ணு.சற்று நேரத்தில் எதிர் வீட்டுக்காரன் வந்து அமர்ந்து கொள்ள, இருவரும் பல விஷயங்களை பேச ஆரம்பித்தனர்.காதரின் மனைவி மும்தாஜ் வெளியே போவதும், வருவதுமா போக்கு காட்டி கொண்டிருந்தாள்.''ஏம்மா மும்தாஜ்! உன் வீட்டுக்காரர்கிட்ட ஏதாவது பேசணுமா? குட்டி போட்ட பூனை மாதிரி உள்ளேயும், வெளியேயும் போய்ட்டு வர்ற?''சேமகண்ணு கேட்க, காதர் திரும்பி குரல் கொடுத்தான். ''என்ன மும்தாஜ்?''''ஒண்ணுமில்லைங்க!''இருவரும் விட்ட இடத்திலிருந்து பேசிக் கொண்டிருந்து விட்டு, மின்சாரம் வந்ததும் அவரவர் வீடுகளுக்கு திரும்பினர்.மறுநாள் காதரின் மனைவி மும்தாஜ், ''என் கணவரின் சட்டை பாக்கெட்டிலிருந்து நான் பணம் எடுத்தததை என் வீட்டுக்காரர்கிட்ட சொல்லிடாதீங்க!''''இல்லம்மா நான் சொல்ல மாட்டேன். சரி, நீ ஏன் அவருக்கு தெரியாம அவர் பணத்தை திருடுற?''''அவர் வீட்டு செலவுக்கு வழக்கம் போல தான் தர்றாரு. இந்த நோன்பு நேரத்துல எக்ஸ்ட்ரா செலவுக்கு கேட்டால் தர மாட்டேங்கிறாரு. பிள்ளைங்க பண்டம் கேக்கிறாங்க. அதுதான் அவர் பாக்கெட்ல கைய வச்சேன். இருந்தாலும் திருடுறனேன்னு குற்ற உணர்ச்சியா இருக்கு.''''கவலைப்படாதே. ஒரு சஹாபி பெண்மணி, தன்னோட கணவரோட பணத்தை எடுத்துட்டு நம்ம நபிகள் நாயகத்திடம் போய் சொன்னப்ப, உன் குடும்ப தேவைக்கு மட்டும் எடுத்துக்க; இது திருட்டு இல்லை என்று சொன்னார்களாம்.'''அப்படியா, நல்லது. நாளைய கூடுதல் செலவுக்கு ஒரு, 100 ரூபாயை என் புருஷன் பாக்கெட்லயிருந்து இன்னைக்கி சாயந்தரம் கரன்ட் கட்டாகிறப்ப எடுத்துக்கப் போறேன்!'' என்றாள் காதரின் மனைவி மும்தாஜ். -------கதை எண் - - 8: பல் துலக்குதல்சூரியன் மேற்கே பயணப்பட்டுக் கொண்டிருந்தான். சேமகண்ணு நடந்து ஹவுஜில் வந்து அமர்ந்தார். தண்ணீர் தடாகம் சில்லென்று வெயிலுக்கு இதமா இருந்தது.சுற்றி இருந்த மரங்களில் கிளம்பிய சன்னமான காற்று தென்றலாய் வருடியது.தண்ணீருக்குள் கைகளை விட்டு விரல்கள் வழியே குளிர்ச்சியை அனுபவித்தார்.''என்ன சின்ன பிள்ளையாட்டம் விளையாடிக்கிட்டு இருக்கீங்க சேமகண்ணு?''திரும்பி பார்த்தால், இமாம் நின்று கொண்டிருந்தார்.''வாங்க இமாம்!''''என்ன பண்றீங்க?''''உளு பண்ணப்போறேன்!''''கைல என்ன பிரஷ்ஷும், பேஸ்ட்டும்?'''''நோன்பு வைத்து, ஒண்ணும் சாப்பிடாம வாய் நமநமன்னுது. அது தான் பல் தேய்க்கலாம்ன்னு!''''உங்களுக்கு தெரியாதா நோன்பு நேரத்தில் மதியத்துக்கு மேல் பல் துலக்காமல் இருக்கிறது விரும்பத்தக்க செயல். ஏன்னா நோன்பாளியோட வாய்வாடை இறைவனுக்கு, கஸ்துாரியை விட மணம் ஆனதாக இருக்கும்னு நபிகள் நாயகம் சொல்லிருக்காங்க.''''இப்ப நான் என்ன பண்றது?''''நோன்பு திறந்த பிறகு பல் துலக்குங்க. இப்ப, 'உளு' மட்டும் செஞ்சுட்டு தொழுங்க.''''சரிங்க இமாம்... அப்படியே செய்றேன்!'' என்ற சேமகண்ணு, பேஸ்ட் பிரஷை ஒதுக்கிவிட்டு 'உளு' செய்ய ஆரம்பித்தார். சேமகண்ணுவின் வாய் மணத்தது.========================திருத்தப்பட்டது25.05.2020 தினமலர் நாளிதழ் -ரம்ஜான் சிறப்பு மலருக்காக 28.04.2020 எழுதப்பட்டது. ˜நோன்பின் தாத்பரியம் ரஹ்மத் ராஜகுமாரன்ஐந்து வயது சிறுமி ஹுமைரா, இரவு ஸஹர் சாப்பிட முன் வந்து, 'நானும் ˜நோன்பு பிடிப்˜பேன்' என அடம் பிடிக்கிறாள். 'சரி, காலையில் டிபன் ˜கேட்டால் கொடுத்து விடு˜வோம்' என்று மொத்த குடும்பமும் முடிவு எடுக்கிறது.காலையில் எழுந்திருக்கவும் பால் ˜கேட்கும் ஹுமைரா அன்று ˜கேட்காம˜லே நிற்கிறாள். தாய்š பாலை ஊற்றி கொடுக்கவும், '˜வேண்டாம்மா நான் தான் ˜நோன்பு வைத்திருக்கி˜றேனே...' என்கிறாள். மாலையில் எல்˜லாருடனும் ˜சேர்ந்து, ˜நோன்பு திறக்கிறாள்.எங்கிருந்து வந்தது இந்த சின்ன குழந்தைக்கு இத்தனை வலுவான மனக் கட்டுப்பாடு?இதற்கு ஆன்மிக ரீதியாக ˜நோன்பை சற்று ஆராš˜ய்வோம்.'˜நோன்பின் ஒவ்வொரு மணித்துளியும் பிரக்ஞை˜யோடு நகர்கிறது.'இந்த அனுபவத்தை குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் வெளிச்சத்தில் இட்டுப் பார்த்˜தேன். மனம் ஏன் பல திசைகளில் திரிகிறது, அதை உண்டாக்குவது யார் என்ற ˜கேள்விகள் எனக்குள் பிறந்தன.அவன் - சைத்தான். மனிதர்களின் நெஞ்சங்களில் ஊசலாட்டத்தை உண்டாக்குகிறான் என்று குர்ஆன் (114:5) கூறும் விடை கிடைத்தது.'அவன் எங்˜கே இருக்கிறான்?' என்ற அடுத்த ˜கேள்வி எழுந்தது.'ஜீன்களிலும், மனிதர்களிலும் இருக்கிறான்... என்று குர்ஆன் (114:6) கூறும் விடை கிடைத்தது.'மனிதர்களில் எங்˜கே இருக்கிறான்?' என்னும் ˜கேள்வியும் தொடர்ந்தது.'ஆதமுடைய மகனின் (மனிதனின்) ரத்தநாளங்களில் எல்லாம் சைத்தான் ஓடிக் கொண்டிருக்கிறான்...' என்று அதற்கு விடை பகர்ந்தது நபிமொழி. அப்படி என்றால் சைத்தான் ரத்த நாளங்களில் ஓடுவதாக விஞ்ஞானம் ஏ˜தேனும் சொல்கிறதா?இப்˜போது விஞ்ஞான ரீதியாக ஆராய்š˜வோம்.முஸ்லிம்கள், ரமலான் மாதம் முழுவதும் ˜நோன்பு ˜தோற்பதில் பல மருத்துவ பயன்கள் உள்ளன என்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆனால், முஸ்லிம்கள் யாரும் தாங்கள் இப்படி ˜நோன்பு வைப்பதால் மருத்துவ பயன்கள் அடைய˜ வேண்டும் என்ற ˜நோக்கத்தி˜லோ அல்லது உடம்பை குறைக்க ˜வேண்டும் என்ற ˜நோக்கத்தி˜லோ ˜நோன்பு பிடிப்பதில்லை... மாறாக, தன் ரட்சகன் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட மணி˜நேரங்களில் உண்ண, பருக, உடலுறவு கொள்ள தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளான் என்ற கட்டளைக்கு அடிபணிய மட்டு˜ம் நோன்பு ˜முஸ்லிம்கள் நோற்கின்றனர்.ஆனால், அவர்களுக்கு ரட்சகனின் கட்டளைக்கு அடிபணிந்த நன்மை, முதல் நிலையாக கிடைத்தாலும், இரண்டாம் நிலை பயனாக மருத்துவ பயன்களும் கிடைத்˜தே விடுகிறது.பொதுவாக, மருத்துவத்தில் பட்டினி இருப்பது, உணவு கட்டுப்பாடு கொள்வது எல்லா˜ம் உடல் எடையை குறைக்க˜வோ அல்லது ஜீரண மண்டலத்திற்கு ஓšய்வு அளிக்க˜வோ அல்லது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க˜வோ ˜மேற்கொள்ளப்படுகிறது.முழு˜நேர விரதத்திலும், 'கிராஷ் டயட்' எனப்படும் உணவுக் கட்டுப்பாடு முறைகளிலும் பல விளைவுகள் வரலாம். இஸ்லாம் கூறும் ˜நோன்பு, இவற்றை விட முற்றிலும் வித்தியாசமானது. இதில், ஊட்டச்சத்து குறைபாடு நிலை வந்ததாக இன்று வரை எந்த ஆதாரங்களும் இல்லை.ரமலான் மாதம் ˜மேற்கொள்ளும் ˜நோன்பின் ˜போது, தினம் ˜தேவையான க˜லோரியை விட சிறிது குறைவாக மட்டும் எடுத்துக் கொள்கின்றனர்.இது போக, ரமலான் ˜நோன்பு என்பது ஒவ்வொரு முஸ்லிமும் எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல், எந்த மருத்துவர்களாலும் அறிவுறுத்தப்படாமல் தானாக முன்வந்து மேற்கொள்ளப்படும் கடமை.ரமலானில் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை நாம் உண்ணுதல், பருகுதல் மற்றும் உடலுறவு கொள்வதை தவிர்க்கி˜றோம். இந்த ˜நேரங்களில் நாம் தண்ணீர் அருந்துவதை முழுவதுமாக தவிர்ப்பதால் உடலில் ˜கேடு உண்டாகும் என்று பலர் நினைக்கின்றனர். உண்மையில் தண்ணீரை முழுவதுமாக தவிர்ப்பதால், உடலில் உள்ள ரத்தம் ˜போன்ற திரவங்கள் மிக அடர்த்தி தன்மை அடைகின்றன.இதனால், சிறிது நீர்சத்து குறைவு ஏற்படலாம். ஆனால், மனித உடல் நீர்சத்து குறைவு ஏற்பட்டா˜லோ அல்லது நீர் அதிகம் ஆனா˜லோ இயல்பாக˜வே உடலின் நீரை பராமரிக்கும் பொறிமுறை பெற்றுள்ளது. ஒரு உண்மை என்னவென்றால், சிறிது நீர்சத்து குறைவும் மற்றும் அதனால் உடலில் ஏற்படும் நீரை பராமரிக்கும் தன்மையும் ˜சேர்ந்து நீண்ட ஆயுளை தரும் வல்லமை உள்ளது என்று மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது.˜மேலே சொல்லப்பட்ட விஷயத்தை, இங்˜கே பொருத்திப் பாருங்கள். நோன்பின் போது, சைத்தானின் செயல்பாடும் மனிதனின் மனக் கட்டுப்பாட்டால் குறைகிறதல்லவா.˜நோன்பு ˜நோற்பதால் உடலியல் ரீதியான நன்மைகளான, ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுதல். ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் குறைதல் மற்றும் ரத்த அழுத்தம் குறைதல் ஆகியவை ஏற்படுகிறது. உண்மையில், ரமலான்˜ நோன்பு என்பது மிதமான ˜லேசான கட்டுப்பாட்டில் உள்ள, 'டைப் - 2' சர்க்கரை ˜நோய் (இன்சுலின் சார்ந்து ரத்த சர்க்கரை ˜நோய்) உடல் பருமன் மற்றும் ரத்த கொதிப்பு ஆகிய ˜நோய்களுக்கு சிறந்த பரிந்துரையாகும்.அடுத்து மெšய்ஞானத்திற்கு வரு˜வோம். இறைவனின் பேராண்மையானது, 'நிச்சயமாக மனிதனை நாம் தான் படைத்˜தோம். அவன் மனம் அவனிடம் என்ன ˜பேசுகிறது என்பதையும் நாம் அறிகிறோம். அவனின் பிடரி நரம்பை விட மிக நெருக்கமாக இருக்கி˜றோம்' என்று குர்ஆன் (50:16) இந்த வசனம் குறிப்பிடுகிறது.˜மேற்குறிப்பிட்ட, (114:5) ஆம் வசனத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். தடுமாற்றத்தையும், வீணான சந்˜தேகங்களையும் ˜போடுபவன் சைத்தான் என்று அந்த வசனம் சொல்கிறது. மேலும், மனம், மனிதனிடம் ஊசலாடுகிறது என்று இந்த (50:16) வசனம் காட்டுவதால் மனம் ˜வேறு, நான் ˜வேறு என்பதும் தெளிவாகிறது.இந்த இரண்டு வசனங்களும் நான்கு ˜பேரை முன்வைத்து, அவர்களிடை˜யே உள்ள தொடர்புகளைக் கூறுகின்றன.1) சைத்தான் 2) மனம் 3) மனிதன் 4) இறைவன்.சைத்தான்சைத்தான் ஊசலாட்டங்களை மனதில் ˜போடுகிறான். மனம் அதை அப்படி˜யே மனிதனிடம் ஒப்பிக்கிறது. அதை இறைவன் அறிகிறான்.சைத்தான் - ஊசலாட்டத்தை ˜போடுபவன்.மனம் (நப்ஸ்)- ஊசலாட்டம் ˜போடப்படும் இடம் அல்லது ஸ்தலம்.மனிதன் (இன்சான்)- மனதை வைத்திருப்பவன்.இறைவன் - ஊசலாட்டத்தை அறிபவன்.அடுத்த˜ கேள்வி நமக்கு வருகிறது.அந்த சைத்தானைப் படைத்தது யார்... அ˜தே இறைவன் தான்.அந்த மனதைப் படைத்தது யார்... அ˜தே இறைவன் தான்.அந்த மனிதனைப் படைத்தது யார்... அ˜தே இறைவன் தான்.எனினும், ˜மேற்கண்ட திருவசனத்தில் (50:16) மனிதனைத் தான் படைத்ததை சொல்லித் தான் வசனத்தை ஆரம்பம் செய்கிறான். 'மனிதனிடம் அவன் மனம் ˜பேசுபவற்றை நாம் அறிகி˜றோம். அதற்குக் காரணம், அவனிடம் பிடரி நரம்பை விடவும் மிக நெருங்கியுள்ளோம்' என்று மட்டும் சொன்னா˜லே கருத்து வந்து விடும். எனினும், மனிதனைத் தான் படைத்ததைச் சொல்லித் துவங்கியிருப்பது ஏன்? அதில் என்ன ஞான நுட்பம் பொதிந்து கிடக்கிறது என்பதைச் சிந்திக்க ˜வேண்டும்.அல்லாஹ் யாருக்கு எவ்வளவு திறக்கிறா˜னோ அவ்வளவு தான் காட்சி. அந்த வகையில் எனக்கு திறந்ததில் இருந்து இதைச் சொல்லிக் கொண்டிருக்கி˜றேன்.'மனிதனின் பிடரி நரம்பை விட, அவனிடம் நான் மிக நெருங்கியிருக்கி˜றேன். ஏன் தெரியுமா? அவ˜னை, 'நான் தான் படைத்˜தேன்...' என்று இறைவன் சொல்கிறான். இதனால், அவன் உணர்த்த வருவது என்ன? 'அடியா˜னே அறிந்து கொள். என்னால் படைக்கப்பட்டது என்று ஒரு பொருள் இருக்கு˜மேயானால், அதனுடன் நிச்சயமாக நானும் இருக்கி˜றேன்...' என்பது தான்!அப்படியானால் மனதையும், அதில் ஊசலாட்டம் போடும் சைத்தானையும் அவன் தா˜னே படைத்தான். குறிப்பாக, மனிதனைப் படைத்ததை ஏன் சொல்ல˜ வேண்டும்? மனிதனுடன் தான் இருப்பதை மட்டும் ஏன் குறிப்பிட்டுக் கூற ˜வேண்டும் என்னும் ˜கேள்விகள் எழுகின்றன.சைத்தான், மனம் மற்றும் மனிதன் ஆகிய இந்த மூவரில் இறைவன் மனிதனுக்கு ஆதரவாக இருக்கிறான் என்பதை இந்த திருவசனம் குறிப்பு காட்டுகிறது. இல்லையெனில் துாக்கியெறியப்பட்ட சைத்தானை விட்டும், அல்லாஹ்வின் பாதுகாப்பில் ஆகி˜றேன்.- 'அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' என்று ஓதுவ˜தே அர்த்தமில்லாமல் ˜போய்šவிடும்.இதிலும் ஒரு விஷயத்தைக் கவனியுங்கள். 'சைத்தானை விட்டும், நப்சை (மனதை) விட்டும் அல்லாஹ்வின் பாதுகாவலில் ஆகி˜றேன்...' என்று சொல்வதில்லை. ஏனெனில், மனம் என்பது சைத்தான் ஊசலாட்டத்தைப் ˜போடும் ஸ்தலமாக மட்டு˜மே இருக்கிறது. எனினும், அது சைத்தானின் ஆதிக்கத்தில் இருக்கும்˜போது, 'தீமையின் பக்கம் துாண்டும் மனம்' (12:53) என்று அதன் பக்கம் செயலை இணைத்துச் சொல்லப்படுகிறது. மனதில் ஊசலாட்டம் சைத்தானால் ˜பாடப்படுகிறது என்பது இன்னொரு விஷயத்தையும் உணர்த்துகிறது.அதாவது, மனதின் இயல்பு நிலை, தடுமாற்றம் அல்ல, பதற்றம் அல்ல, கொந்தளிப்பு அல்ல, அழுத்தம் அல்ல, குழப்பம் அல்ல, இவையெல்லாம் ஊசலாட்டத்தின் அறிகுறிகள், விளைவுகள். மனதின் இயல்பு நிலை அமைதி தான்; மனம் இறைவனின் பக்கம் சார்ந்துவிடும் ˜போது, அதில் அமைதியும் பரவசமும் நிறைந்து விடுகிறது. அப்˜போது அது, 'நிம்மதி அடைந்த மனம்' என்று குர்ஆன் (89:27) சொல்கிறது.˜நோன்பு கொடுத்த இந்தப் பயிற்சியின் மூலம் கிடைத்த நிம்மதி அடைந்த மனதால், தான தர்மங்கள் அதிகம் செய்கிறான் மனிதன்.'இதனால் சைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்.' - நபிமொழி (அறிவிப்பவர் அபீஹுரைரா (ரலி) நுல்- முஸ்லிம் 1957)ரமலான் மாதத்தின் மாண்புகள் எத்தகையது? அது ˜நோன்பின் பயிற்சியால் இதயத்தையும் பார்வையையும் செயல்களையும் ஒட்டுமொத்த வாழ்வையும் துாய்šமைப்படுத்துகிற மாதம் தான் ரமலான்!'நோன்பை தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக ˜நோன்பு எனக்கு மட்டு˜மே உரியது. அதற்கு நா˜னே கூலி கொடுப்˜பவன்...' என்று அல்லாஹ் கூறினான்.இதை விட ˜வேறு என்ன மாண்பு ˜வேண்டும் மனிதனுக்கு! =============================================='இமாம்பரா!'- ஆர்னிகா நாசர்வீட்டு வாசலில், வீட்டு உள் அலங்கார நிபுணர், ஜோயலின் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினான், ஜோயல். மஞ்சள் நிற பூக்கள் இறைக்கப்பட்ட தொள தொள சட்டையும், ஜீன்சும் அணிந்திருந்தான்; கண்களில் குளிர் கண்ணாடி.ஒரு பிளாஸ்டிக் குழலுக்குள் கட்டட வரைபடம் சுருட்டியிருந்தான். வரவேற்பறையில், ஜோயலை வரவேற்றான், நஜ்முத் தவ்லா.வட்ட மேஜையின் எதிர் எதிரே ஜோயலும், தவ்லாவும் அமர்ந்தனர். ''நீங்கள் கட்டப்போகும் புது வீட்டின் உள் அலங்கார வரைபடத்தை எடுத்து வந்திருக்கிறேன்!''குழலிலிருந்து எடுத்து மேஜையில் விரித்தான். விரித்தது மீண்டும் சுருளாமலிருக்க, நான்கு மூலைகளில் பேப்பர் வெயிட் வைத்தான்.“இரண்டாயிரம் சதுர அடியில் வீடு கட்டப் போகிறோம். எஸ்டிமேட், 80 லட்சம் ரூபாய். சிவில் இன்ஜினியர்கள் பிளான் பண்ணி வீடு கட்டுவதற்கும், ஆர்கிடெக்ட்கள் டிசைன் பண்ணி வீடு கட்டுவதற்கும், அடிப்படையிலேயே பல வித்தியாசங்கள் உள்ளன. சிவில் இன்ஜினியர்கள் கட்டும் வீடுகள், உரைநடை என்றால், ஆர்கிடெக்ட்கள் கட்டும் வீடுகள், 'ஹைக்கூ' கவிதைகள். வீட்டின் செங்கல்லிலும், சிமென்டிலும், இரும்புக்கம்பியிலும், ஆர்க்கிடெக்டின் ஆன்மா ஒளிந்திருக்கும்”இந்த சுய தம்பட்டத்தை ரசிக்கவில்லை, நஜ்முத் தவ்லா.“சரி, விஷயத்துக்கு வாருங்கள் ஆர்க்கிடெக்ட்,” என்றார்.வீட்டின் வடிவமைப்பை ஜோயல் விவரித்துக்கொண்டிருக்கும் போது, தவ்லாவின் ஒரே மகள், தாபான் பதர் படிப்பறையிலிருந்து வெளிப்பட்டாள். வயது 15; 10ம் வகுப்பு படிப்பவள்; மிகவும் புத்திசாலியான பெண்.ஆர்க்கிடெக்குக்கும், தந்தைக்கும் இடையே வந்து நின்றாள். இரு கைகளையும் கட்டியபடி, இருவர் பேசுவதையும் உன்னித்தாள். மகளின் இருப்பை கண்ணுற்று மவுனித்தான், தவ்லா. பத்து நிமிடங்களுக்குப் பின், “குறுக்கிட மன்னிக்கவும். நான் சில கேள்விகள் கேட்கலாமா?” என்றாள், பதர்.“கேள் மகளே!”“ஆர்கிடெக்ட் டிசைன் பண்ணியுள்ள வீட்டில், அனைத்து வசதிகளும் உள்ளன; மகிழ்ச்சி. ஆனால், ஒரே ஒரு விஷயம் விட்டுப் போனது போல் தெரிகிறது எனக்கு!”“எது விட்டுப் போச்சு பேபி,” என்றாள், ஜோயல்.“நான், என்னுடைய தோழியர் வீடுகளுக்கு சென்றிருக்கிறேன். அவர்கள் வீடுகளில், பூஜையறை இருப்பதை பார்த்திருக்கிறேன். பேச்சு வழக்கில் அதை, சாமி ரூம் என்பர். அவர்களின் பூஜையறைகளுக்குள் போனால், பக்தி வராதவர்களுக்கும் பக்தி வந்து விடும். அறைக்குள் குங்குமம், விபூதி வாசனை அடிக்கும். சாமி படங்கள் நிறைந்திருக்கும் அறையை உன்னித்தால், கடவுளர் தேசத்துக்குள் புகுந்தது போல, ஓர் பரவசம் பூக்கும். ஹிந்துகளுக்கு பூஜையறை இருப்பது போல, முஸ்லிம் வீடுகளுக்கு வழிபாட்டு அறை ஏன் இல்லை?”நஜ்முத் மவுனிக்க, ஆர்க்கிடெக்ட் முறுவலித்தான். 'பேபி! நான், நுாற்றுக்கணக்கான பணக்கார முஸ்லிம்களுக்கு வீடு, 'டிசைன்' பண்ணிக் கொடுத்த அனுபவத்தில் கூறுகிறேன். இஸ்லாமியர் வீடுகளிலும், வழிபாட்டு அறை கட்டும் பழக்க வழக்கம் இருக்கவே இருக்கிறது. வீட்டில் ஒரு தனி இடத்தை அல்லது தனி அறையை தொழுகை மற்றும் மவுலது முதலான சமய காரியங்களுக்கென ஒதுக்கி, அதை பேணுதலோடு காத்து வருவது, சில முஸ்லிம் குடும்பங்களில் பழக்கம். அந்த இடத்தை, 'இமாம்பரா' என்கின்றனர். 'இமாம்பரா' என்பது அரபியும், உருதுவும் கலந்த வார்த்தை!''மறுதலிப்பாக தலையாட்டினான், நஜ்முத். ''இதை மார்க்கம் வலியுறுத்தாது. இது, தனிமனிதர் விருப்பு வெறுப்பை பொறுத்தது, ஆர்க்கிடெக்ட்!''''ஏன் அப்படி சொல்கிறீர்கள், நஜ்முத்?''''பூமியின் எந்த தரையும் தொழக்கூடிய இடம் தான். கிப்லா பார்த்து தொழுதால் சரி. ஆண்கள் பொதுவாகவே ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுதலே சிறப்பு. இமாம்பரா இருந்தால், முஸ்லிம் ஆண்கள் தொழ, பள்ளிக்கு செல்ல மாட்டார்கள்!''''முஸ்லிம் பெண்கள் இமாம்பராவை பயன்படுத்திக் கொள்வரே...''''தனி அறையில் தான் அவர்கள் தொழ வேண்டுமா?''''இமாம்பரா எனக் குறிப்பிட்டு, நாம் ஒரு தனி அறையை ஒதுக்கினால், அந்த அறைக்கு தனி அந்தஸ்து அளிப்போம்; மிக சுத்தமாக வைத்துக் கொள்வோம். அறையின் மூன்று பக்கங்களில், கண்ணாடி போட்ட ஷெல்பில், இஸ்லாமிய நுால்கள் அடங்கிய நுாலகம் வைக்கலாம்; ஒரு தொழுகை கம்பளம் தரையில் விரிக்கலாம்; தஸ்பீஹ் மணிமாலை தொங்க விடலாம்!''''அறை என்ன அளவில் இருக்கும்?''''மூன்று பேர் தொழுகை வரிசையாக அமர்ந்து தொழும் அளவுக்கு இருந்தால் போதும். நீளம், 10 அடி; அகலம், 8 அடி போதும். அறையை, குளிர்சாதன வசதி செய்யலாம் நஜ்முத்!''''ஆர்க்கிடெக்ட் நீங்கள், 'இமாம்பரா' எந்த நாட்டவருக்கு அதிகம் கட்டிக் குடுத்துள்ளீர்கள்?''''வட மாநிலத்தவர், ஈரானியர் மற்றும் அரபிகளுக்கு கட்டிக் குடுத்துள்ளேன்!''''இமாம்பரா தமிழ் முஸ்லிம்களுக்கு ஒத்து வராது, ஜோயல்!''''ஏன்?''''கொஞ்ச நாளில், 'இமாம்பரா' அறையை பழைய சாமான்கள் போட்டு வைக்கும், 'கிளாக்' ரூமாக்கி விடுவர், தமிழ் முஸ்லிம்கள். 'இமாம்பரா' அறையில், இறந்து போன, மூதாதையரின் புகைப்படங்களை மாட்டி விடுவர். முதல் தலைமுறையில், 'இமாம்பரா'வாக இருக்கும் அறைகள், அடுத்த தலைமுறையில், குட்டி தர்காவாகி விடும்.''''படித்த முஸ்லிம்கள், நீங்கள் சொல்வது போல நடக்க மாட்டார்கள். 'இமாம்பரா'வில் யோகா, தியானம் செய்ய வாய்ப்பிருக்கிறது. திருக்குர் ஆன் வேதப்புத்தகம் தனக்குரிய இருக்கையில் அமர்ந்திருக்கும்; அறைக்குள் பக்தி வாசனை கமழும்.''''கற்பனையில் வாழ்கிறீர்கள், ஆர்க்கிடெக்ட்!''''இல்லை இல்லை... நான், 'இமாம்பரா' கட்டிக் கொடுத்த வீடுகளை, ஒரு வருஷம் மற்றும் இரண்டு வருஷம் கடந்த பின், பார்வையிடச் சென்றிருக்கிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அந்த அறைக்கு, வீட்டு அங்கத்தினர்கள் கொடுக்கும் மரியாதை அசாத்தியம். 'இமாம்பரா'வுக்கும், என்னை அனுமதிக்க மறுத்த முஸ்லிம்களும் உண்டு. 'இமாம்பரா' ஒரு வீட்டுக்கு ஜீனத்தையும், பரக்கத்தையும், ஆன்மிக பிரகாசத்தையும் கொண்டு வருகிறது!''விழுந்து விழுந்து சிரித்தான், நஜ்முத் தவ்லா.''ஏன் சிரிக்கிறீர்கள்?''''ஜோயல்! நீங்களோ கிறிஸ்டின். நீங்கள் ஏன், 'இமாம்பரா' கட்ட பிடிவாதம் காட்டுகிறீர்கள்... ஒரு சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்ற, தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுகிறீர்கள். 'இமாம்பரா' பழக்கம் கூட, ஹிந்துக்களை பார்த்து வந்த பழக்கமாக எனக்கு தெரிகிறது.''''என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர், நஜ்முத். நான், என் வாடிக்கையாளரிடம் பேசுவது கிறிஸ்துவனாக அல்ல; ஆர்க்கிடெக்ட்டாக. வீடு மொத்தத்திலும் இல்லாத வைபரேஷனை, இமாம்பரா எனும் தனி அறையில் கொண்டு வரமுடியும் என, நம்புகிறேன். கிறிஸ்துவர்களுக்கு ஜெப அறை என, ஒன்று இருப்பது போல, இஸ்லாமியருக்கு வீட்டில் தொழுகை அறை இருந்தால் என்ன தப்பு?''நஜ்முத்தின் முகம் குழப்பமடைந்தது.இதைப் பற்றி, மதநல்லிணக்க இமாமிடம் கேள்வி கேட்டு தெளிவு பெற்றால் என்ன?கைபேசியை எடுத்து, 10 இலக்க எண்ணை அமுக்கினான், நஜ்முத்.எதிர்முனை உயிர்த்தது.வீட்டுக்கு வரச் சொன்னான்; வந்தார்.ஆர்க்கிடெக்ட்டுக்கும், தனக்கும் நடந்த உரையாடலை விவரித்தான், நஜ்முத் தவ்லா. ''இப்ப சொல்லுங்க ஹஜ்ரத்... புது வீட்டில், 'இமாம்பரா' கட்டுதல் ஆகுமா, ஆகாதா?''வானவர் போல் சிரித்தார், இமாம்.''இந்த யோசனை, ஆர்க்கிடெக்ட்டின் சொந்த யோசனையா?''''இல்லை; என் மகள் தாபான் பதர் சொன்ன யோசனை.''சிறுமியை, வாச்சல்யமாய் உன்னித்தார், இமாம். ''இமாம்பராவை, 'நமாஸ் ரூம்'னு சொல்வாங்க. இது, ஹிந்துக்களை பார்த்து வந்த பழக்கமல்ல; ஹிந்துக்களை பார்த்து வந்திருந்தாலும் தப்பில்லை. நல்ல விஷயம் யாரிடமிருந்து வந்தால் என்ன? ஒரு வீட்டில், பணத்தை பீரோவில், மணிபர்சில், புடவை முடிச்சில் மற்றும் மேஜையில் என, பல இடங்களில் வைத்திருப்பர். அதே வீட்டில் உண்டியலை வைத்துப் பாருங்கள்... உண்டியலில் தினம் தினம் நாணயங்களை போட, உண்டியல் நிரம்பும். இறை பக்தி எங்கும் நிறைந்திருக்கிறது; அதை ஓர் அறையில் குவிக்கிறோம். அவ்வளவு தான்.''ஆர்க்கிடெக்ட், ''யூ ஆர் கரக்ட், முல்லா!''''நன்றி. 'இமாம்பரா'வில் உட்கார்ந்து திக்கிர் எடுக்கலாம். பள்ளிவாசலில் தொழும் நேரங்கள் தவிர, கூடுதல் தொழுகைகளை, களா செய்த தொழுகைகளை, நள்ளிரவு தொழுகைகளை, 'இமாம்பரா'வில் தொழலாம்!''''நம் ஊரில், யாராவது தங்களது புது வீட்டை கட்டும் போது, இமாம்பராவை கட்டியிருக்கின்றனரா?'' கேட்டான், தவ்லா.''யாராவது செய்தால் தான் நாம் செய்ய வேண்டுமா? நமக்கு சுயபுத்தி இருக்கக் கூடாதா? அல்லது ஒரு நல்ல காரியத்தை முன்னோடியாக செய்யக் கூடாதா?''கொஞ்சம் இறங்கி வந்தான், நஜ்முத் தவ்லா.''எப்பவுமே நீங்க ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திட்டா, மறுகேள்வி கேக்காம, காரியத்தை செஞ்சிடுவேன். என்னுடைய புது வீட்டில், 'இமாம்பரா' கட்டாயம் அமைந்திருக்கும்.''''நல்லது... நான் கிளம்பலாமா, நஜ்முத் பாய்?''''இருங்க, இமாம். இஞ்சி டீ குடிச்சிட்டுப் போகலாம்!''சுடச்சுட தேநீர் தயாரித்து, மூன்று கோப்பைகளில் கொண்டு வந்து நீட்டினாள், தாபான் பதரின் தாய்; உறிஞ்சினர்.எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தபடி மெதுவாக, ''நஜ்முத் பாய்! மஹல்லா மக்கள் உதவிகளை பெற்று, பாபநாசத்திலே, 450 சதுர அடில ஒரு சிறு வீடு கட்டினேன் அல்லவா? அந்த வீட்டில், 'இமாம்பரா' அறை உண்டு. அந்த அறைக்குள், யோகா, தியானம் செய்து தான், என்னுடைய, லோ சுகர், ஆஸ்துமா பிரச்னைகளை போக்கினேன். முன்னோடி உண்டா என கேட்டீர்களே பாய்... உங்க இமாமே இந்த விஷயத்துல உங்களுக்கு முன்னோடி!''எழுந்து சைக்கிளுக்கு போகும் இமாமுக்கு, சலாம் கூறி, பதில் சலாம் பெற்றாள், தாபான் பதர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X