பொது செய்தி

தமிழ்நாடு

வர்த்தகத்துக்கு ஏற்ப வட்டி விகிதம்: அரசுக்கு, 'கொடிசியா' கோரிக்கை

Added : மே 24, 2020
Share
Advertisement

கோவை:வர்த்தகத்துக்கு ஏற்ப, வங்கி கடன்களுக்கு வட்டி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, 'கொடிசியா' முன்வைத்துள்ளது.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்க (கொடிசியா) தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது:தொழில் துறை மீள்வதற்கு மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். கொரோனா ஊரடங்கால் மீண்டும் 'பூஜ்யம்' நிலையில் இருந்துதான் தொழில் துவங்க வேண்டியுள்ளது. புதிதாக தொழில் துவங்கும்போது ஏற்படும் தேவைகளை தற்போது எம்.எஸ்எம்.இ., நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளன.பொருட்கள் உற்பத்தி செய்தாலும் விற்பனை இல்லை; சந்தைகளில் 'ஆர்டர்' வருவதில்லை.
இந்நிலையில், கடனை செலுத்துவது சிரமம். கடன் தவணை செலுத்த மேலும், மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதியில்தான், 70 சதவீதம் விற்பனையாவது நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.நாடு முழுவதும் உற்பத்தியும், விற்பனையும் சீராக நடக்க வேண்டும். பஸ், ரயில், விமான சேவை முழுமையடைந்தால்தான் வர்த்தகமும் நடக்கும். எனவே, கடன் செலுத்தும் அவகாசத்தை, அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்க வேண்டும்.
நிறுவனங்களின் விற்பனை, வர்த்தகத்துக்கு ஏற்ப வங்கி கடன்களுக்கு வட்டி விகிதம் நிர்ணயித்தால் சிரமம் குறையும். தற்போதைய சூழலில், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பெரும் சிரமத்தில் உள்ளன. அரசின் அறிவிப்புகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டால்தான், தொழில் துறை மீண்டு வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X