கட்டடப் பணிகள் முடக்கம்| Dinamalar

கட்டடப் பணிகள் முடக்கம்

Added : மே 24, 2020
Share

பரமக்குடி:கொரோனா ஊரடங்கால் தொழிலாளர்கள் வேலையின்றிதவிக்கின்றனர்.

ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தாலும் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் போக்குவரத்து வசதி முடக்கப்பட்டுள்ளதால், தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பரமக்குடி நகராட்சி பகுதிகளில் வீடு கட்டுவோர் மற்றும் இன்ஜினியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணி முடிக்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் கட்டுமானப் பொருட்களின் விலையும் மறைமுகமாக ஏற்றம் கண்டுள்ளது.

இந்நிலையில்தொழிலாளர்கள் பற்றாக்குறையால் கூலியும் அதிகரித்துள்ளது.ஆகவே தொழிலாளர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கும் விதமாகபோக்குவரத்தில் சமூக இடைவெளியுடன் தளர்வு ஏற்படுத்த வேண்டும்,என கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X