குப்பை கொட்டும் இடமானபிள்ளையார் கோயில் ஊரணி

Added : மே 24, 2020
Share
Advertisement

பரமக்குடி:பரமக்குடி நகராட்சிஎமனேஸ்வரம் மலையான் குடியிருப்பு பகுதியில் பிள்ளையார் கோயில் ஊரணி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி இருக்கும். அருகில் உள்ள வீட்டு கிணறுகளில் தண்ணீர் வற்றாமல் இருந்தது.

இந்நிலையில், ஊரணியை சில ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகம்கண்டு கொள்ளாமல் விட்டதால் குப்பை கொட்டும் இடமாக மாற்றியுள்ளனர். மேலும் ஊரணி தடுப்பு சுவர்களும் சேதம் அடைந்துள்ளது.இதனால், அப்பகுதி ஆழ்குழாய்களின் தண்ணீர் இன்றி மக்கள் நீண்டதுாரம் சென்று தண்ணீர் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் தண்ணீருக்காக அலையும் நிலை உருவாகியுள்ளது.நகராட்சி நிர்வாகம் ஊரணியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X