பொது செய்தி

தமிழ்நாடு

மூன்று ரகத்தில் தென்னங்கன்று: திருமூர்த்திமலையில் உற்பத்தி

Added : மே 24, 2020
Share
Advertisement
 மூன்று ரகத்தில் தென்னங்கன்று: திருமூர்த்திமலையில் உற்பத்தி

உடுமலை:உடுமலை, திருமூர்த்திமலை மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தில், மூன்று ரகங்களின் தென்னங்கன்றுகள் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.பருவ மழை துவங்க உள்ளதால், தென்னங்கன்று விற்பனை அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை, திருமூர்த்தி மலை அருகே, 102 ஏக்கர் பரப்பளவில், மத்திய தென்னை வளர்ச்சி வாரிய நாற்றுப்பண்ணை உள்ளது. இங்கு, தென்னை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, மானிய விலையில் வழங்கப்படுகிறது.விதைக்காய்கள் நடவு செய்து, நாட்டு ரகமான மேற்கு கடற்கரை நெட்டை, சாவுக்காடு ஆரஞ்சு குட்டை, மலேசியன் பச்சை குட்டை ஆகிய மூன்று ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.மத்திய தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரும் நெட்டை, குட்டை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. தற்போது, 10 ஆயிரம் மேற்கு கடற்கரை நெட்டை ரகங்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. 10 ஆயிரம், மலேசியன் பச்சை குட்டை, சாவுக்காடு ஆரஞ்சு குட்டை ஆகியவற்றின் விதைக்காய்கள் பதியம் போடப்பட்டு, ஒரு மாதத்தில் தென்னங்கன்றுகள் தயாராகும். தேவைப்படும் விவசாயிகள், தென்னை வளர்ச்சி வாரியத்தை அணுகலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X