பொது செய்தி

தமிழ்நாடு

பல்லடத்தில் மூட்டை மூட்டையாக போதை 'சாக்லேட்': உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல்

Added : மே 24, 2020
Share
Advertisement
 பல்லடத்தில் மூட்டை மூட்டையாக போதை 'சாக்லேட்': உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல்

பல்லடம்:பல்லடம் அருகே, பதுக்கி வைத்திருந்த போதை சாக்லேட்டுகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சின்னக்கரை பகுதியில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை, வட்டார அலுவலர் கேசவராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
அதில், ஒடிசாவை சேர்ந்த ம்ருத்யஞ்ஜய ரவுத் என்பவரின், 'மா நாயனா ஸ்டோர்' என்ற மளிகை கடையில் ஆய்வு செய்தனர். கடை மற்றும் அருகிலுள்ள குடோனில், போதை சாக்லேட், மாத்திரைகள், பான்மசாலா, குட்கா பொருட்கள், மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதனால், அவரது குடோன் மற்றும் மளிகை கடைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.மளிகை வியாபாரி, 30 ரூபாயில் போதை சாக்லேட் பாக்கெட்டுகளையும் விற்பனை செய்து வந்துள்ளார். மளிகை கடை அருகே, தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இதனால், மாணவர்களும் போதை பொருட்களுக்கு அடிமையாகும் அபாயம் உள்ளது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
மூட்டை மூட்டையாக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட இச்சம்பவம், பல்லடம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில் இருந்து கடத்தல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, கடை உரிமையாளர் கடத்தி வந்துள்ளார். மளிகை கடை எனும் பெயரில், குடோனில் போதைப் பொருட்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்து வந்துள்ளார். ம்ருத்யஞ்ஜய ரவுத்துக்கு, சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X