சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நட்புக்கு போலீஸ், துட்டுக்கு பெண்கள்' ; விசாரணையில் காசி 'கலகல'

Added : மே 24, 2020
Share
Advertisement

நாகர்கோவில் : போலீசிடம் நட்பாகவும், பெண்களுடன் பணத்திற்காகவும் பழகியதாக காசி போலீசில் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி என்ற சுஜி 26. சென்னையை சேர்ந்த பெண் டாக்டரை ஏமாற்றி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டார். இவர் மீது கந்து வட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ என பல வழக்குகள்பதிவாகியுள்ளன. போக்சோ வழக்கில் ஆறு நாள் போலீஸ் காவல் அனுமதிக்கப்பட்டு கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காரி விசாரிக்கப்படுகிறார்.போக்சோ வழக்கு தொடர்பான மாணவி முகநுால் மூலம் பழகியதாக கூறியுள்ளார். சில போலீசாரிடம் நட்புக்காவும், பல பெண்களிடம் பணத்துக்காகவும் பழகியதாக கூறி போலீசாரை அதிர வைத்து உள்ளார்.

புகார் கொடுத்த ஐந்து பெண்கள் தவிர மேலும் 5 பெண்கள் பெயரை காசி கூறியுள்ளார். சிறையில் இருக்கும் நிலையில் அவரது லீலை படங்கள் எப்படி வெளியானது என கேட்டதற்கு சில நண்பர்கள் பெயரை கூறியுள்ளார்.அந்த நண்பர்கள் மற்றும் மீதமுள்ள ஐந்து பெண்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X